கோபால் கிருஷ்ண பிள்ளை
கோபால் கிருஷ்ண பிள்ளை (Gopal Krishna Pillai) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் இந்திய அரசின் முன்னாள் உள்துறைச் செயலாளரும் ஆவார். இவர் கேரளாவில் 30 நவம்பர் 1949 அன்று நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியிலும், பெங்களூரு புனித வளனார் கல்லூரியிலும் கல்வியை முடித்துள்ளார். இதன் பின்னர் இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னையில் முது அறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1972ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி தேர்வு மூலம் கேரள பணிநிலைப் பிரிவு அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர்.
கோபால் கிருஷ்ண பிள்ளை Gopal Krishna Pillai | |
---|---|
இந்திய உள்துறைச் செயலர் | |
பதவியில் 30 சூன் 2009 – 30 சூன் 2011 | |
முன்னையவர் | மதுகர் குப்தா |
பின்னவர் | ராஜ்குமார் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 நவம்பர் 1949 கேரளம் |
துணைவர் | சுதா பிள்ளை |
வேலை | அரசு ஊழியர் (இந்திய ஆட்சிப் பணி) |
கேரளாவில் வகித்த பதவிகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Aditi Phadnis; Rituparna Bhuyan (2009-06-12). "Newsmaker: Gopal Krishna Pillai". Business Standard. pp. 1. http://www.business-standard.com/india/news/newsmaker-gopal-krishna-pillai/360843/.
- ↑ "G S Pillai new home secretary". The Times of India. 2009-06-12. http://timesofindia.indiatimes.com/india/G-S-Pillai-new-home-secretary/articleshow/4646049.cms.