கோபால பிள்ளை

இந்திய நிர்வாகி

முனைவர். ஜி. சி. கோபால பிள்ளை (Gopala Pillai) திருவிதாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயன நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிய ஒரு இந்திய அதிகாரியுமாவார். இவர் கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தையும் (KINFRA) நிறுவினார்.

இவர் பொது-தனியார் கூட்டாண்மை மூலம் மாநிலத்திற்காக தான் நினைத்த பல திட்டங்களை வளர்த்தெடுத்தார். அதில் கேரளா பற்றிய இவரது பார்வை தெளிவாகத் தெரிகிறது. இவர் சிலகாலம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் கேரளா நிறுவனத்தின் தலைவராக இருந்தார். [1] கேரளாவின் மிகவும் ஆர்வமுள்ள நிர்வாகிகளில் ஒருவராகவும் அங்கீகரிக்கப்பட்டவர். [2]

அரசாங்கத்திற்குச் சொந்தமான கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். இன்கெல் நிறுவனத்தில் இவர் பணியாற்றியதைத் தொடர்ந்து, கேரள அரசின் பொதுத்துறை மறுசீரமைப்பு மற்றும் உள் தணிக்கை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

கல்வி தொகு

கோபால பிள்ளை திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். மேலும் சட்டத்தில் கூடுதல் பட்டப்படிப்பையும் முடித்தார்.திருவனந்தபுரம் லயோலா சமூக அறிவியல் கல்லூரியில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் முடித்தார். அடிப்படைப் பட்டங்களைத் தவிர, இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் பிஇஎம்சி படித்தார். [3]

சொந்த வாழ்க்கை தொகு

இவரது மனைவி லதா மருத்துவராக உள்ளார். இவரது மகன் சபரீஷ் கோபால பிள்ளை, இந்திய வருவாய் துறையில் அதிகாரியாக உள்ளார். [4] [5]

மேற்கோள்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 31 ஆகத்து 2009 at the வந்தவழி இயந்திரம்
  2. Gopala Pillai is new FACT chief. The Hindu Business Line (25 June 2005). Retrieved 20 October 2011.
  3. Institute of Management in Kerala. Imk.ac.in. Retrieved 20 October 2011.
  4. The third face of Janus. Sabareeshpillai.blogspot.com. Retrieved 20 October 2011.
  5. CS(M) 2003. Upsc.gov.in. Retrieved 20 October 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால_பிள்ளை&oldid=3798474" இலிருந்து மீள்விக்கப்பட்டது