கோபியுலா டெரோங்கோ
கோபியுலா டெரோங்கோ | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பேரினம்: | கோபியுலா
|
இனம்: | கோ. தெரோங்கோ
|
இருசொற் பெயரீடு | |
கோபியுலா தெரோங்கோ சுவிபெல், 2000 | |
வேறு பெயர்கள் [2] | |
ஆசுட்ரோகாபெரினா தெரோங்கோ |
கோபியுலா தெரோங்கோ (Copiula derongo) கூர்வாய் (மைக்ரோகையலிடே) குடும்பத்தினைச் சார்ந்த தவளையாகும். இது பப்புவா நியூ கினி மற்றும் இந்தோனேசியா ஆகிய இரண்டு பகுதிகளிலுமே காணப்படுகிறது.[1][2] இதன் சிற்றினப் பெயரான டெரோங்கோ இத்தவளை வாழும் வட்டாரத்தினை குறிக்கும் பெயராகும். டெரோங்கோ கிராமம், பப்புவா நியூ கினியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ளது.[3] மூலக்கூறு ஆதாரங்களின் அடிப்படையில், 2016-ல் இத்தவளையானது ஆசுட்ரோகாபெரினா பேரினத்திலிருந்து கோபியுலா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][4]
விளக்கம்
தொகுஆண் தவளைகளின் உடல் நீளம் 37 mm (1.5 அங்) வரையும் பெண் தவளைகளில் இது, 50 mm (2.0 அங்) வரையும் உள்ளது. இருந்தபோதிலும் உடலின் அதிகபட்ச அளவு வாழிடத்தினைப் பொறுத்து மாறுபடுகிறது. முதுகுபுற நிறமானது ஆலிவ் முதல் சிவப்பு பழுப்பு போன்று காணப்படும். சில நேரங்களில் அடர் திட்டுக்களாகக் காணப்படும். பொதுவாக ஆண்களின் (சில பெண் தவளைகளில்) தலையின் முன்பகுதி பிறபகுதிகளைவிட மிகவும் வெளிறிக் காணப்படும். கண்கள் சிறியவை. செவிப்பறை தெளிவாகத் தெரிவதில்லை.[3]
வாழ்விடம் மற்றும் பாதுகாப்பு
தொகுஇத்தவளையின் இயற்கை வாழ்விடங்கள் வெப்பமண்டல காடுகள் ஆகும். இங்கு மண் குழிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. பொதுவானது இத்தவளைகள் மனித நடமாட்டம் குறைவான பகுதிகளில் காணப்படுவதால், அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதாகக் கருதப்படவில்லை.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Richards, S.; Bickford, D. (2016). "Austrochaperina derongo". IUCN Red List of Threatened Species 2016: e.T57690A91486627. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T57690A91486627.en. https://www.iucnredlist.org/species/57690/91486627.
- ↑ 2.0 2.1 2.2 Frost, Darrel R. (2016). "Copiula derongo (Zweifel, 2000)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 23 July 2016.
- ↑ 3.0 3.1 Zweifel, R. G. (2000). "Partition of the Australopapuan microhylid frog genus Sphenophryne with descriptions of new species". Bulletin of the American Museum of Natural History 253: 1–130. doi:10.1206/0003-0090(2000)253<0001:POTAMF>2.0.CO;2. http://digitallibrary.amnh.org/handle/2246/1600.
- ↑ Peloso, Pedro L.V.; Frost, Darrel R.; Richards, Stephen J.; Rodrigues, Miguel T.; Donnellan, Stephen; Matsui, Masafumi; Raxworthy, Cristopher J.; Biju, S.D. et al. (2016). "The impact of anchored phylogenomics and taxon sampling on phylogenetic inference in narrow-mouthed frogs (Anura, Microhylidae)". Cladistics 32 (2): 113–140. doi:10.1111/cla.12118.