கோபி சந்த் நரங்
கோபி சந்த் நரங் (ஆங்கிலம்: Gopi Chand Narang ) (பிறப்பு: 1931 பிப்ரவரி 11 ) பாக்கித்தானிலுள்ள பலூசிஸ்தானின் தக்கி என்ற ஊரில் பிறந்த இவர் ஓர் இந்திய கோட்பாட்டாளரும், இலக்கிய விமர்சகரும் மற்றும் அறிஞருமாவார். அவர் உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார். அவரது உருது இலக்கிய விமர்சனங்கள் நுட்பங்கள், கட்டமைப்புவாதம், பிந்தைய கட்டமைப்புவாதம் மற்றும் கிழக்கு கவிதை உள்ளிட்ட நவீன தத்துவார்த்த கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
கல்வி
தொகுநரங் தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து உருது மொழியில் முதுகலைப் பட்டமும், 1958 இல் அவரது முனைவர் பட்டம் முடிக்க கல்வி அமைச்சகத்திலிருந்து ஆராய்ச்சிக்கான உதவியும் பெற்றார்.
கற்பித்தல் பணி
தொகுதில்லி பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு நரங் புனித ஸ்டீபன் கல்லூரியில் (1957–58) உருது இலக்கியம் கற்பித்தார். அங்கு அவர் 1961 இல் வாசிப்பு பணியில் சேந்தார். 1963 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் அவர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இருந்தார். மினசோட்டா பல்கலைக்கழகம் மற்றும் ஓஸ்லோ பல்கலைக்கழகத்திலும் பணி புரிந்துள்ளார். நரங் 1974 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக சேர்ந்தார். 1986 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்து 1995 வரை பணிபுரிந்து 2005 ஆம் ஆண்டில், இந்தப் ஒரு பேராசிரியராக ஓய்வு பெற்றார்.
நரங்கின் முதல் புத்தகம் ( தில்லி உருது மொழியின் கார்கண்தரி பேச்சுவழக்கு) 1961 இல் வெளியிடப்பட்டது, இது பழங்குடி தொழிலாளர்கள் மற்றும் தில்லி கைவினைஞர்களால் பேசப்பட்ட புறக்கணிக்கப்பட்ட பேச்சுவழக்கின் சமூகவியல் பகுப்பாய்வு ஆகும். மேலும் இவர் உருது, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் 60 க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.
சாதனைகள்
தொகுஅவர் மூன்று ஆய்வுகளைத் வெளியிட்டுள்ளார்: இந்துத்தானி கிசன் சே மக்கூசு உருது மசுனவியன் (1961), உருது கசல் அவுர் இந்துத்தானி ஜெக்ன்-ஓ-தெக்சீப் (2002) மற்றும் இந்துத்தான் கி தெக்ரீக்-இ-ஆசாதி அவுர் உருது சேரி (2003) ஆகியவை. நரங்கின் தொடர்புடைய தொகுதிகள் - அமீர் குஸ்ரோ கா கிந்தவி கலாம் (1987), சானிகா-இ-கர்பாலா பாட்டர் செரி இசுதியாரா (1986) மற்றும் உருது ஜபான் அவுர் லிசானியாத் (2006) - போன்றவை சமூக-கலாச்சார மற்றும் வரலாற்று ஆய்வுகள் ஆகும்.
கற்பிப்பதைத் தவிர, தில்லி உருது அகாதமி (1996-1999) மற்றும் உருது மொழியை மேம்படுத்துவதற்கான தேசிய அமைப்பின் துணைத் தலைவராகவும் நரங் இருந்துள்ளார். - மனித வளத் துறைத் தலைவர் (1998-2004) மற்றும் துணைத் தலைவர் (1998-2002) மற்றும் சாகித்ய அகாதமியின் தலைவர் (2003-2007) போன்ற பொறுப்புகளைையும் வகித்துள்ளார்.
மரியாதைகள்
தொகுநாரங் தனது பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் 2002-2004 வரை இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் இந்திரா காந்தி நினைவு உறுப்பினராகவும், 1997 இல் இத்தாலியில் உள்ள ராக்ஃபெல்லர் அறக்கட்டளை பெல்லாஜியோ மையத்தில் வசிப்பவராகவும் இருந்தார். நரங் மச்சினி தங்கப் பதக்கம் (இத்தாலி, 2005), அமீர் குஸ்ரோ விருது (சிகாகோ, 1987), கனடிய அகாதமி ஆப் உருது மொழி மற்றும் இலக்கிய விருது (டொராண்டோ, 1987), ஆசிய ஆய்வுகள் சங்கம் (மத்திய அட்லாண்டிக் பிராந்தியம்) விருது ( யுஎஸ், 1982), ஒரு ஐரோப்பிய உருது ரைட்டர்ஸ் சொசைட்டி விருது (லண்டன், 2005), உருது மார்கஸ் சர்வதேச விருது (லாஸ் ஏஞ்சல்ஸ், 1995) மற்றும் ஆலாமி ஃபரோக்-இ-உருது அடாப் விருது ( தோஹா, 1998) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் குடியர்சுத்தலைவர்கள் கெளரவித்த ஒரே உருது எழுத்தாளர் இவராவார். 1977 ஆம் ஆண்டில் நரங், அல்லாமா இக்பால் குறித்த தனது பணிக்காக பாக்கித்தானிடமிருந்து குடியரசுத் தலைவரின் தேசியத் தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். மேலும் இந்தியாவலிருந்து பத்ம பூஷண் (2004) மற்றும் பத்மஸ்ரீ (1990) ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.[1]
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் (2009) மெளலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் (2008) மற்றும் ஐதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் (2007) ஆகியவற்றிலிருந்து கடிதங்களின் முன்னவர் என்ற கௌரவப் பட்டம் பெற்றுள்ளார். நரங் 1995 இல் சாகித்ய அகாடமி விருது, 1985 இல் காலிப் விருது, உருது அகாடமியின் பகதூர் சா சாபர் விருது, பாரதிய பாசா பரிசத் விருது (இரண்டும் 2010 இல்), மத்தியப் பிரதேச இக்பால் சம்மன் (2011) மற்றும் பாரதிய சனபதி மூர்த்தி தேவி விருது (2012) ஆகியவற்றைப் பெற்றுள்ளார். சாகித்ய அகாடமி நரங்கிற்கு அதன் மிக உயர்ந்த கெளரவமான பெல்லோஷிப்பை 2009 இல் வழங்கியது.[2]
நூற்பட்டியல்
தொகுமொழி, இலக்கியம், கவிதை மற்றும் கலாச்சார ஆய்வுகள் குறித்த 60 க்கும் மேற்பட்ட அறிவார்ந்த மற்றும் விமர்சன புத்தகங்களை நாரங் வெளியிட்டுள்ளார். இவற்றில்பல பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
- ↑ "Fellows & Honorary Fellows". Sahitya Akademi. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Official website பரணிடப்பட்டது 2009-07-28 at the வந்தவழி இயந்திரம்
- 2012 BBC interview (உருதுயில்)
- High priest of Urdu: Gopi Chand Narang by Feroze Bakht Ahmed (Milli Gazette)
- Gopi Chand Narang - Versatile Scholar & Writer (FacenFacts)
மேலும் காண்க
தொகு- Narang, Gopi Chand in Encyclopaedia of Indian Literature, Sahitya Akademi, New Delhi, 1989, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-260-1804-6.
- Jadeed Adabi Theory aur Gopi Chand Narang by Maula Bakhsh, New Delhi, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8223-536-6.
- Deedawar Naqqad by Shahzad Anjum, New Delhi, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187667648.
- Insha Special number on Gopi Chand Narang, ed. by F. S. Ejaz, Kolkata, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8186346198.
- Gopi Chand Narang: Bainul Aqwami Urdu Shakhsiyat, ed. by Nand Kishore Vikram, New Delhi 2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188298020.
- Kaarwan-e Adab's special issue on Gopi Chand Narang, ed. by Javed Yazdani and Kausar Siddiqui, Bhopal, March 2012. RNI No.: MPURD/2005/16563.