கோமளா வரதன்
கோமளா வரதன் (Komala Varadan) என்பவர் இந்தியாவின் பாரம்பரிய பரதநாட்டியக் கலைஞர் மற்றும் ஓர் எழுத்தாளர் ஆவார்[1]. புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு கலை, இலக்கியம் மற்றும் கலாச்சார மேம்பாட்டுக் கலைகூடம் ஒன்றையும் இவர் நிறுவினார்[2]. நடனம், புகைப்படக்கலை மற்றும் ஓவியம் போன்ற பலகலை வடிவங்களில் இவர் தேர்ச்சி பெற்றவராக அறியப்பட்டார்.[3].
கோமளா வரதன் Komala Varadan | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | நடன அமைப்பாளர் ஓவியர் புகைப்படக் கலைஞர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
விருதுகள் | பத்மசிறீ சாகித்திய கலா பரிசத் சம்மன் பாரத் சிரோன்மணி விருது கலைமாமணி விருது ராச்யோட்சவ பரிசத் நாட்டிய ராணி சுடர் விருது, சர்வதேசப் பெண் விருது. |
வலைத்தளம் | |
komalavaradan.com |
தொழில்
தொகுஇந்தியாவின் முன்னணி பாரம்பரியக் நடனக் கலைஞரான வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் சீடராக சேர்ந்து நடனக்கலையை கற்றுக்கொண்டவர்களில் கோமளாவும் ஒருவராவார். இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் தனது நாட்டிய நிகழ்சிகளை இவர் நடத்தியுள்ளார். அறிவியல் மற்றும் கலாச்சார உருசிய மையம், புதுதில்லி, தேசிய நவீன கலைக்கூடம் புதுதில்லி உள்ளிட்ட பல ஓவியக் காட்சியகங்களில் கோமளாவின் படைப்புகள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கோமளா இரண்டு நாவல்களையும் பரதநாட்டியம் குறித்த ஒரு கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். 30 ஆவது தேசிய திரைப்பட விருதுகளின் தேர்வுக்குழுவில் ஓர் உறுப்பினராக இவர் பணியாற்றியுள்ளார். இந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் ஓர் உறுப்பினராகவும் கோமளா இயங்குகிறார்.[3]
தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருது, கர்நாடக அரசு வழங்கும் ராசயோத்சவ பிரசக்தி விருது, , நாட்டிய ராணி பட்டம், கேம்பிரிட்சின் சர்வதேச வாழ்க்கை வரலாற்று மையம் வழங்கிய 1998 -1999 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பெண் விருது, சாகித்திய கலா பரிசத் சம்மன் விருது, 1999 ஆம் ஆண்டிற்கான சுடர் விருது போன்ற பல விருதுகளை கோமளா வரதன் பெற்றுள்ளார் [4][5]. இந்திய அரசு வழங்கும் நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசீறீ விருது இந்திய பாரம்பரிய நாட்டியத்தில் இவருடைய சிறந்த பங்களிப்பிற்காக 2005 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[6]. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கலாச்சார உறவுகள் குழு கோமளாவுக்கு எதிராக தாக்கல் செய்த சிவில் வழக்குக்காக இவரது பெயர் செய்திகளில் அடிபட்டது. 45 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களை விரிவுரை வழங்குநர்களாக வகைப்படுத்தியதற்காக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பும் இவருக்கு எதிராக இருந்தது.[7] 1985 ஆண்டில் வெளியிடப்பட்ட கோமளா வரதன் என்ற சுயசரிதையில் இவரது வாழ்க்கை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.[8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Komala Varadan Performing in Athens". Indo-Hellenic Society for Culture and Development. 1 October 2007. Archived from the original on 8 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Kalaikoodam (Komala Varadan Institute of Art)". Delhi Events. 2015. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ 3.0 3.1 "Exploring relationship between art forms". Tribune. 9 November 2000. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ "World Dance Day by Komala Varadan_'Natya Rani' title in Singapore". Naresh Kumar Sagar. 30 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ "Prakritim Vande - Dance by "Padmashri" Komala Varadan in Austin". Austin India. 2012. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ "Past your Prime -Ageism in dance". Narthaki. 25 April 2003. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- ↑ Komala Varadan (1985). Komala Varadan. Komala Varadan Institute of Art. அமேசான் தர அடையாள எண் B0040IWSNK.
புற இணைப்புகள்
தொகு- "Komala Varadan Performance". YouTube video. Soundravalli Mayandi. 3 June 2010. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.
- "Komala Varadan talks about 'Expressions' Bharatanatyam recital". YouTube video. Delhi Events. 13 April 2009. பார்க்கப்பட்ட நாள் 3 December 2015.