கோயிற்குடியிருப்பு
கோயிற்குடியிருப்பு யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சிப் பிரிவில், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்கில் உள்ள உப்பாறு கடலேரியின் கரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் சங்கத்தானையும், கிழக்கு எல்லையில் கடலேரியும், மேற்கில் சாவகச்சேரி நகரப் பகுதியும், தெற்கில் தனங்கிளப்பும் உள்ளன.[1] இவ்வூர் தனங்கிளப்பு கிராம அலுவலர் பிரிவுக்குள் அடங்கியுள்ளது.
இவ்வூர் கடலேரியை அண்டி அமைந்துள்ளதால், மீன்பிடித்தொழிலும் இவ்வூரில் ஒரு முக்கியமான தொழிலாக உள்ளது. 2013 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இவ்வூரில் 76 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றன.[2]
குறிப்புகள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- Statistical Information of the Northern Province-2014, Northern Provincial Council, Sri Lanka.
- Statistical Information 2010, Northern Provincial Council, Sri Lanka.