கோரமாரா தீவு

இந்தியத் தீவு


கோரமாரா தீவு (Ghoramara Island) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிற்கு தெற்கில் 92 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  வங்காள விரிகுடாவின் சுந்தர்பன் டெல்டா வளாகத்தில் ஒரு சிறிய தீவாக இது காணப்படுகிறது. தோராயமாக ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கோரமாரா தீவி பரந்து விரிந்துள்ளது. ஆனால் கடல் அரிப்பு மற்றும் கடல் மட்ட உயர்வு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. [1]

கோரமாரா தீவு
கோரமாரா தீவு is located in மேற்கு வங்காளம்
கோரமாரா தீவு
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
தீவுக்கூட்டம்சுந்தரவனக்காடுகள்
நிர்வாகம்
இந்தியா
மக்கள்
மக்கள்தொகை3000
2022 ஆம் ஆண்டில் கோரமாரா தீவு

சுருங்கும் தீவு தொகு

புவி வெப்பமடைதல் காரணமாக இமயமலையில் இருந்து புறப்பட்டு வங்காள விரிகுடாவில் கலந்து வரும் வரும் ஆறுகள் சமீப பத்தாண்டுகளில் பெருக்கெடுத்து நகர்ந்து சுந்தரவனக்காடு எனப்படும் இந்த தீவுகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. நான்கு தீவுகள் முற்றிலும் நீருக்கடியில் உள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள மேலும் 10 தீவுகள் ஆபத்தில் உள்ளன. [1]

இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் 2007 ஆம் ஆண்டு ஆய்வின் முடிவில் சுந்தர்பன் காடுகளின் 31 சதுர மைல்கள் (80 km2) 30 ஆண்டுகளில் காணாமல் போயுள்ளன. மேலும் கோரமாரா பதிமூன்று சதுர கிலோமீட்டர்கள் அல்லது ஐந்து சதுரமைல்கள் அளவுக்கு 1969 ஆம் ஆண்டில் இருந்ததை விட அதன் பாதி அளவில் சுருங்கியுள்ளது. இந்த நில இழப்பு காரணமாக 600 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் இடப்பெயர்வு அடைந்துள்ளனர்.[2]

மக்கள் தொகை தொகு

கோரமாரா தீவில் ஒரு காலத்தில் 40,000 மக்கள் இருந்துள்ளனர். [3] 2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய அரசு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கோரமாராவில் 5,000 பேர் இருந்ததாக மக்கள் தொகையைக் காட்டியது; தீவு மூழ்கி வருவதால் குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. பல குடும்பங்கள் சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி சென்றுள்ளனர். இதனால் மக்கள் தொகை சுருங்கிவிட்டதாக நம்பப்படுகிறது. [4] 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, தீவில் 3,000 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருந்தனர்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Disputed isle in Bay of Bengal disappears into sea". March 24, 2010. http://usatoday30.usatoday.com/tech/science/environment/2010-03-24-bengal-island-sinking_N.htm. 
  2. Sengupta, Somini (April 10, 2007). "India's river Delta islands washing away". New York Times. https://www.nytimes.com/2007/04/10/world/asia/10iht-india.5.5220466.html. 
  3. 3.0 3.1 Shapiro, Ari (May 20, 2016). "Rising Tides Force Thousands To Leave Islands Of Eastern India". NPR. பார்க்கப்பட்ட நாள் May 22, 2016.
  4. Singh, Shiv Sahay (2019-11-23). "Hungry tides of the Sundarbans: How the rising seas create environmental migrants". The Hindu. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/hungry-tides-in-the-sundarbans/article30054094.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரமாரா_தீவு&oldid=3874615" இலிருந்து மீள்விக்கப்பட்டது