கோரேவாதா ஏரி
.
கோரேவாதா ஏரி Gorewada Lake | |
---|---|
அமைவிடம் | நாக்பூர், மகாராட்டிரம் |
ஆள்கூறுகள் | 21°11′50″N 79°2′15″E / 21.19722°N 79.03750°E |
வகை | நன்னீர் |
முதன்மை வெளியேற்றம் | பிலி ஆறு |
வடிநில நாடுகள் | இந்தியா |
குடியேற்றங்கள் | நாக்பூர் |
கோரேவாதா ஏரி (Gorewada Lake) நாக்பூர் நகரின் வடமேற்கு மூலையில் கோரேவடா ஏரி அமைந்துள்ளது. 2,350 அடி நீளம் கொண்ட அணையுடன் இந்த ஏரி உருவாக்கப்பட்டது [1]
1912 ஆம் ஆண்டு நீர் மேலாண்மை துறையினால் ஏரி மேம்படுத்தப்பட்டது. நாக்பூரில் அப்போது வாழ்ந்த 1.01 இலட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக கோரேவாதா ஏரி திகழ்ந்தது [2]. அடர்த்தியான காடு சூழ்ந்த பகுதி எல்லையாக இருப்பதால் ஏரியையும் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பறவை இனங்கள் மற்றும் சில விலங்குகள் குடியிருக்கின்றன. மகாராட்டிர மாநில அரசு ஏரியைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 1914 எக்டேர் பரப்பளவில் வேட்டைக்குழு ஒன்றை உருவாக்கியது. நாட்டின் முதலாவது வேட்டைக்குழு இதுவென பல செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2005 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த வேட்டைக்குழு திட்டம் 2016 இல் தொடங்கப்பட்டது. சிறுத்தைகள், இந்திய மான்கள், மயில்கள் மற்றும் சில விலங்குகள் அங்கு இருப்பதாக அறியப்படுகிறது. கோரேவாதா ஏரிக்கு அருகிலுள்ள சாலை கோரேவாதா சுற்றுச் சாலை என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பல திறந்தவெளி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்காபாய் தக்லி, போர்கவுன், கிட்டிகாதான் போன்றைவை ஏரிக்கு அருகிலுள்ள சில பகுதிகளாகும் [3]
நாக்பூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருப்பினும் ஏரியைச் சுற்றியுள்ள குப்பை, எரிந்த நெகிழி போன்றவைகளால் ஏரியின் சுற்றுப்புறம் மாசடைந்து காணப்படுகிறது. மீன் பிடிப்பும் கடல் சிப்பிகள் போன்றவையும் இங்கு காணமுடிகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "GEO". http://nagpur.nic.in. Archived from the original on 2005-02-17. பார்க்கப்பட்ட நாள் 2008-05-19.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ "ToI article on Gorewada Lake". Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-23.
- ↑ "The Info List - Gorewada Lake". theinfolist.com - 2014-2017. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
- Nagpur Lake Photos பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்