கோர்ஃபு

கிரேக்கத் தீவு

கோர்ஃபு (Corfu அல்லது Kerkyra ( கிரேக்கம்: Κέρκυρα‎ , pronounced [ˈcercira] [a] என்பது அயோனியன் தீவுகளின் அயோனியன் கடலில் உள்ள ஒரு கிரேக்க தீவு ஆகும். இதன் சிறிய துணைத் தீவுகள் உள்ளிட்டவை, கிரேக்கத்தின் வடமேற்கு எல்லையாக உள்ளளன. இந்த தீவு கோர்ஃபு பிராந்திய அலகின் ஒரு பகுதியாகும், மேலும் இது ஓதோனோய், எரிகோசா, மாத்ராகி தீவுகளுடன் மூன்று நகராட்சிகளைக் கொண்டதாக உள்ளது.[1] தீவின் முக்கிய நகரம் (ம. தொ. 32,095) கோர்பு என்று அழைக்கப்படுகிறது.[2] கோர்பு அயோனியன் பல்கலைக்கழகத்தின் அமைவிடம்.

கோர்ஃபு
உள்ளூர் பெயர்: Κέρκυρα
Island of Corfu, Greece
பொன்டிகோனிசி (பின்னணி) மற்றும் விளாசெர்னா மடாலயம் (முன்புறம்) கனோனி மலை உச்சியில் இருந்து தோற்றம்
புவியியல்
ஆள்கூறுகள்39°35′N 19°52′E / 39.583°N 19.867°E / 39.583; 19.867
பரப்பளவு610.9 km2 (235.9 sq mi)
உயர்ந்த ஏற்றம்906 m (2,972 ft)
நிர்வாகம்
மக்கள்
DemonymCorfiot, Corfiote
மக்கள்தொகை102,071
அடர்த்தி167.08 /km2 (432.74 /sq mi)
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
 • Summer (பசேநே)
அஞ்சல் குறியீடு490 81, 490 82, 490 83, 490 84, 491 00
தொலைபேசி குறியீடு(கள்)26610, 26620, 26630
அதிகாரபூர்வ இணையதளம்www.corfu.gr

இந்த தீவு கிரேக்கத் தொன்மங்களின் தொடக்கத்திலிருந்து கிரேக்கத்தின் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது பல போர்கள் மற்றும் வெற்றிகளில் குறிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய கோர்கிரா சைபோட்டா போரில் பங்கேற்றது. இது பெலோபொன்னேசியப் போருக்கு ஒரு காரணமாக இருந்தது. மேலும் துசிடிடீசின் கூற்றுப்படி, அதுவரை கிரேக்க நகர அரசுகளுக்கு இடையே நடந்த போர்களில் மிகப்பெரிய கடற்படைப் போராக அது இருந்தது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டு கிரேக்கத்தின் மூன்று பெரிய கடற்படை சக்திகளில் ஏதென்ஸ் மற்றும் கொரிந்துடன் கோர்கிராவும் ஒன்று என்று துசிடிடீஸ் தெரிவிக்கிறார்.[3] பண்டைய கிரேக்க கோவில்களின் இடிபாடுகள் மற்றும் பண்டைய நகரமான கோர்கிராவின் பிற தொல்பொருள் தளங்கள் பாலையோபோலிசில் காணப்படுகின்றன. தீவு முழுவதும் உத்திநோக்கு இடங்களை காக்கும் வகையில் கட்டப்பட்ட இடைக்கால கோட்டையகங்கள் இடைக்காலத்தில் கடற்கொள்ளையர்கள் மற்றும் உதுமானியர்களின் படையெடுப்புகளுக்கு எதிரான போராட்டக்கு சான்றாக உள்ளன. இந்த இரண்டு கோட்டையகங்கள் இதன் தலைநகரை சூழ்ந்துள்ளன, இவ்வாறு கிரேக்கத்தில் உள்ள ஒரே நகரம் இது ஆகும். இதன் விளைவாக, கோர்புவின் தலைநகரம் கிரேக்க அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக காஸ்ட்ரோபோலிஸ் ("கோட்டை நகரம்") என அறிவிக்கப்பட்டது.[4] இடைக்காலம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வரை, பல முற்றுகைகளின் போது தீவு உதுமானியரை வெற்றிகரமாக விரட்டியது. இது உதுமானியப் பேரரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளின் அரணாக அங்கீகரிக்கப்பட்டது மேலும் ஐரோப்பாவின் மிகவும் வலுவான இடங்களில் ஒன்றாக மாறியது. ஏட்ரியாட்டிக்கிற்குள் உதுமானியர்களின் ஊடுருவலுக்கு எதிராக தற்காத்துக் கொள்ள தீவின் கோட்டைகள் வெனிசியர்களால் பயன்படுத்தப்பட்டன. நெப்போலியன் போர்களைத் தொடர்ந்து கோர்பு இறுதியில் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் விழுந்தது. இறுதியில் அயோனியன் தீவுகளின் அமெரிக்காவின் மீதமுள்ள தீவுகளுடன் பிரித்தானிய அரசாங்கத்தால் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டது. 1864 இல் லண்டன் உடன்படிக்கையின் கீழ் நவீன கிரேக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. நவீன கிரேக்க அரசின் முதல் பல்கலைக்கழகமான அயோனியன் அகாடமி மற்றும் நவீன கிரேக்கத்தின் முதல் கிரேக்கநாடக அரங்கம் மற்றும் ஓபரா ஹவுஸான நோபில் டீட்ரோ டி சான் கியாகோமோ டி கோர்ஃபே ஆகியவற்றின் தோற்றம் கோர்பு ஆகும். 1821 புரட்சிக்குப் பிறகு சுதந்திர கிரேக்கத்தின் முதல் ஆளுநர், நவீன கிரேக்க அரசின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற ஐரோப்பிய இராஜதந்திரி அயோனிஸ் கபோடிஸ்ட்ரியாஸ் கோர்புவில் பிறந்தவர்.

2007 ஆம் ஆண்டில், நகரத்தின் பழைய நகரம் நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் பரிந்துரையைத் தொடர்ந்து யுனெஸ்கோ உலக பாரம்பரியக் கள பட்டியலில் சேர்க்கப்பட்டது.[5][6][7] 1994 ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு கோர்புவில் நடைபெற்றது.[8] இந்த தீவு ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.[9][10]

புவியியல்

தொகு
 
கோர்ஃபு தீவு மற்றும் அதன் துணைத் தீவுகளின் வரைபடம்.

கோர்புவின் வடகிழக்கு விளிம்பு அல்பேனியாவின் சரண்டே கடற்கரைக்கு நெருக்கமாக அமைந்துள்ளது. இது 3 முதல் 23 கிமீ (2 முதல் 14 மைல்கள்) அகலத்தில் மாறுபடும் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது. தீவின் தென்கிழக்கு பகுதி கிரேக்கத்தின் தெஸ்ப்ரோட்டியா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது. தீவின் வடிவம் அரிவாளை (drepanē, δρεπάνι) ஒத்திருக்கிறது, இந்த அமைப்பு பழங்காலத்தவர்களால் ஒப்பிடப்பட்டது: தீவின் குழிவான ஒரு பக்கத்தின், மையத்தில் கோர்பு நகரமும் துறைமுகமும்,[11] அல்பேனிய கடற்கரையை நோக்கி அமைந்துள்ளது. தீவின் பரப்பளவு 592.9 சதுர கிலோமீட்டர் (146,500 ஏக்கர்) என மதிப்பிடப்பட்டுள்ளது,[12] இது தோராயமாக 64 கிமீ (40 மைல்) நீளம் கொண்டது. அகலம் மிகுந்த பகுதி சுமார் 32 கிமீ (20 மைல்) ஆகும்.

தீவின் இரண்டு உயரமான, தாழ்வான நிலப்பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளைக் கொண்டு தீவு மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுளன. அவை வடக்கு மலைகள், மத்தியில் உயர்ந்தும் தாழ்ந்தும் அலைகள் போன்ற நிலப்பகுதி, தெற்கில் உள்ள தாழ் நிலப்பகுதிகள் ஆகும். தீவில் இரண்டு மலைத் தொடர்கள் மிகவும் முக்கியமானவை. பான்டோக்ரேட்டர் மலைகள் கிழக்கு மற்றும் மேற்காக ஃபலாக்ரோ முனையிலிருந்து, பிசரோமிட்டா முனை வரை நீண்டுள்ளது, மேலும் அதே பெயரைக் கொண்ட சிகரமானது அதன் உயரமான பகுதியாக கொண்டுள்ளது.[11]

 
வடமேற்கு கோர்ஃபுவில் உள்ள அஜியோஸ் ஜார்ஜியோஸ் விரிகுடா

இரண்டாவது மலைத்தொடரானது சாண்டி ஜெகா அல்லது சாண்டா டெக்கா மலையில் முடிவடைகிறது, இது கிரேக்க சுடுப் பெயரான Άγιοι Δέκα (ஹகியோய் டெகா) என்று அழைக்கப்படுகிறது. முழுத் தீவும், பல்வேறு சுண்ணாம்புக் கற்களால் ஆனது, மேற்பரப்பு பல்வகைமையானதாக உள்ளது.[11] தீவின் அஜியோஸ் கோர்டிஸ், கோரிஷன் லகூன், அஜியோஸ் ஜார்ஜியோஸ், மராத்தியா, காசியோபி, சிடாரி, பாலையோகாஸ்ட்ரிட்சா போன்ற பல இடங்களில் கடற்கரைகள் காணப்படுகின்றன. கோர்ஃபு கெஃபலோனியா புவியியல் உரசுமுணையின் அருகில் அமைந்துள்ளதால் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புகள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. https://corfutvnews.gr/diaspasi-deite-tin-tropologia/ (in கிரேக்கம்)
  2. "ΦΕΚ B 1292/2010, Kallikratis reform municipalities". Government Gazette.
  3. Thucydides, History of the Peloponnesian War 1.36.3
  4. "Corfu City Hall website". City of Corfu. Archived from the original on 6 January 2008. In literature, apart from the Homeric name Scheria, we meet various other names for the island, like Drepanë or Arpi, Makris, Cassopaea, Argos, Keravnia, Phaeacia, Corkyra or Kerkyra (in Doric), Gorgo or Gorgyra and much later the medieval names Corypho or Corfoi, because of the two characteristic rock-peaks of the Old Fortress of Corfu.
  5. "on UNESCO World Heritage List". BBC News. 28 June 2007. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6248244.stm. 
  6. "UNESCO Advisory Body ICOMOS report on Corfu History" (PDF). பார்க்கப்பட்ட நாள் 3 July 2007.
  7. "Old Town of Corfu on UNESCO website retrieved 3 July 2007". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 29 June 2009.
  8. "European Union Summit: Corfu summiteers ready to fudge key EU decision". The Independent. 24 June 1994. https://www.independent.co.uk/news/world/europe/european-union-summit-corfu-summiteers-ready-to-fudge-key-eu-decision-national-status-on-parade-as-leaders-of-the-twelve-consider-two-candidates-to-succeed-jacques-delors-as-commission-president-1424715.html. 
  9. Duncan Garwood, Mediterranean Europe, 2009
  10. Russell King, John Connell, Small worlds, global lives: islands and migration, 1999
  11. 11.0 11.1 11.2   ஒன்று அல்லது மேற்பட்ட முந்தைய வரிகள்  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Corfu". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 7. (1911). Cambridge University Press. 145–146. 
  12. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 21 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்ஃபு&oldid=3476539" இலிருந்து மீள்விக்கப்பட்டது