கோலாலம்பூர் பறவை பூங்கா
கோலாலம்பூர் பறவை பூங்கா; (மலாய்: Taman Burung Kuala Lumpur; ஆங்கிலம்: Kuala Lumpur Bird Park) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஒரு பறவைப் பூங்காவாகும். இந்தப் பறவைப் பூங்காவின் பரப்பளவு 20.9 ஏக்கர்கள் (8.5 ha). இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.
கோலாலம்பூர் பறவை பூங்கா | |
---|---|
கோலாலம்பூர் பறவை பூங்கா | |
3°08′33″N 101°41′18″E / 3.1424337°N 101.6884661°E | |
திறக்கப்பட்ட தேதி | 1991 |
அமைவிடம் | கோலாலம்பூர், மலேசியா |
நிலப்பரப்பளவு | 20.9 ஏக்கர்கள் (8.5 ha) |
விலங்குகளின் எண்ணிக்கை | 3,000 "About Us". klbirdpark.com. Kuala Lumpur Bird Park. Archived from the original on 3 April 2011. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.</ref> |
உயிரினங்களின் எண்ணிக்கை | 200 |
ஆண்டு பார்வையாளர்கள் | 200,000 |
வலைத்தளம் | Official Web site |
ஒவ்வொரு வருடமும் இந்தப் பறவை பூங்காவிற்குச் சராசரியாக 200,000 பார்வையாளர்கள் வருகிறார்கள். இது தேசியப் பள்ளிவாசல் மற்றும் மலேசிய காவல்துறை அருங்காட்சியகத்திற்கு அருகில் புக்கிட் அமான் எனும் இடத்திற்கு அருகில் கோலாலம்பூரின் ஏரிப் பூங்காவிற்கு (Lake Gardens) அருகில் அமைந்து உள்ளது.
இந்த பறவைகள் பூங்காவில் 3000-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. இதில் சுமார் 200-க்கும் அதிகமான பறவையினங்கள் உள்ளன. இந்தப் பறவைப் பூங்காவில் 90% உள்ளூர்ப் பறவைகள் மற்றும் 10% ஆஸ்திரேலியா, சீனா, ஆலந்து, இந்தோனேசியா, நியூ கினி, தான்சானியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து கொன்டு வரப்பட்டவை.
வரலாறு
தொகுஇந்தப் பறவைகள் பூங்கா, 60 எக்டேர்கள் (150 ஏக்கர்கள்) கோலாலம்பூரின் ஏரிப் பூங்காவின் ஒரு பகுதியாகும். 1888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 1991-ஆம் ஆண்டில், 20.9 ஏக்கர்கள் (8.5 ha) நிலப் பரப்பில் கூடுதலாக பறவை பூங்கா உருவாக்கப்பட்டது. இந்தப் பூங்காவில், ஒரு செயற்கை ஏரி, தேசிய நினைவுச்சின்னம், கோலாலம்பூர் பட்டாம்பூச்சி பூங்கா, மான் பூங்கா, ஆர்க்கிட் பூ மற்றும் செம்பருத்தி தோட்டங்கள் மற்றும் முன்னாள் மலேசிய நாடாளுமன்ற மன்றம் ஆகியவை அடங்கும்.
இது உலகின் மிகப்பெரிய பறவை பூங்காக்களில் ஒன்றாகும். புக்கிட் அமான் மலைப் பகுதியில் இந்த பூங்கா அமைந்து உள்ளது. மலைப்பகுதியில் உள்ள சரிவுகளையும் மடிகளையும் பார்ப்பதற்கு ஏதுவாக மலைப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
செயல்பாடுகள்
தொகுபறவை-கண்காணித்தல் இங்கே ஒரு பொதுவான நடவடிக்கையாக உள்ளது. விலங்கினங்கள் நிறைந்த கோலாலம்பூர் பறவைகள் பூங்கா அவற்றின் இயற்கையான வாழ்விடங்கள் பற்றிய ஆய்வுக்கு ஆர்வலர்கள் இடையே புகழைப் பெற்றுள்ளது.
பறவை ஆர்வலர்களில் சிலர், பறவைகளின் வாழ்வியல் முறைகள் பற்றிய ஆய்வுக்காக பறவைகளின் கூடுகளைக் கண்காணிக்கும் ஆய்வாளளராக உள்ளனர்.[1]
நுழைவு
தொகுகோலாலம்பூர் பறவை பூங்கா, தினமும் காலை 9 முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். நுழைவுக் கட்டணம் செலுத்திய பின்னர், வருகையாளர்களுக்குப் பூங்காவின் அமைப்பை குறிக்கும் காகித வரைபடம் வழங்கப்படும். மணிக்கட்டு அடையாளக் கட்டு அணிந்த பின்னர், பார்வையாளர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப் படுகின்றது.
இந்தப் பறவைப் பூங்காவின் ஊழியர்களில் பலர் இருமொழி (மலாய், மற்றும் ஆங்கிலம்) தெரிந்தவர்களாக இருப்பதால், பறவைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த தகவல்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
படத்தொகுப்பு
தொகு-
கல்வி மையத்தில் ஒரு பறவைக் குஞ்சு
-
ரெயின்போ லோரிகீட் (Rainbow lorikeets) மற்றும் சிவப்பு லோரி (red lory) பறவைகளின் உணவு நேரம்
-
பறவைகளுக்கான பப்பாளித் துண்டு
-
கோலாலம்பூர் பறவைப் பூங்காவில் ரெயின்போ லோரிகீட்
-
பால் கொக்குகள் கடந்து செல்கிறது
-
ஒரு பறவை பப்பாளித் துண்டை உண்கிறது
-
பூங்காவில் மயில்
-
பூங்கா நுழைவாயிலில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்
-
ஒரு வெண் கிளி
-
கோலாலம்பூர் பறவை பூங்காவில் "எக்ரட்" (Egret) பறவை
-
பக்கவாட்டில் உட்கார்ந்த நிலையில் உள்ள ஒரு பறவையின் பார்வை
-
நுழைவாயிலுக்கு அருகில்
-
ஒரு மயில்
மேற்கோள்கள்
தொகுமேலும் காண்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கோலாலம்பூர் பறவை பூங்கா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்