கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம்

பகாங் தெமர்லோ பகுதியில் உள்ள வனவிலங்கு காப்பகம்.

கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் (மலாய்: Pusat Konservasi Gajah Kuala Gandah; ஆங்கிலம்: Kuala Gandah Elephant Conservation Centre) என்பது மலேசியா, பகாங், தெமர்லோ நகருக்கு அருகில் அமைந்து உள்ள ஒரு வனவிலங்கு காப்பகம் ஆகும்.[1]

கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம்
Kuala Gandah Elephant Conservation Centre
கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையத்தில் ஓர் இளம் யானையைப் பார்வையாளர்கள் குளிப்பாட்டுவதற்கு உதவுகிறார்கள்.
அமைவிடம்பகாங், மலேசியா
அருகாமை நகரம்தெமர்லோ
ஆள்கூறுகள்3°35′32″N 102°08′34″E / 3.5923°N 102.142818°E / 3.5923; 102.142818
நிறுவப்பட்டது1974

இந்தக் காப்பகம் பகாங் குராவ் வனவிலங்கு காப்பகத்தின் (ஆங்கிலம்: Krau Wildlife Reserve; மலாய்: Pusat Konservasi Gajah Kuala Gandah) ஒரு பகுதியாக உள்ளது.

குராவ் வனவிலங்கு காப்பகம் என்பதை குராவ் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைப்பதும் உண்டு. தித்திவாங்சா மலைத்தொடரில் 60,349 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இது மலேசியாவில் மிகப்பெரிய வனவிலங்கு காப்பகமாகும்.

பொது

தொகு

கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம், 1989-ஆம் ஆண்டில் மலேசிய வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் அமைப்பினால் (Malaysian Department of Wildlife and National Parks) நிறுவப்பட்டது. காடுகளில் தனித்து விடப்படும் அல்லது தனித்து வாழும் யானைகளுக்கு ஓர் இடமாற்றுத் தளம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த மையம் அமைக்கப்பட்டது.[2]

ஆசிய யானைகளின் வாழ்விடங்கள் காடுகளின் அழிப்பு அல்லது வேளாண்மைத் திட்டங்கள் போன்றவற்றினால் நடைபெற்று வருகின்றன. காடுகள் அழிக்கப் படுவதால் வாழ்விடம் இல்லாமல் தடுமாறித் திரியும் யானைகளுக்கு, இந்தக் காப்பகம் ஒரு புகலிடமாக விளங்கி வருகிறது. 1974 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

பிரபலமான சுற்றுலாத் தளம்

தொகு

யானைகள் மீதான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது; வனவிலங்கு ஆராய்ச்சிக்கு ஆதரவு அளிப்பது; ஆகியவற்றைப் பிரதானமான நோக்கமாகக் கொண்டு இந்த மையம் இயங்கி வருகிறது. அந்த வகையில் இந்த மையமாது ஒரு பிரபலமான சுற்றுலா அம்சமாகவும் மாறியுள்ளது.[3]

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kuala Gandah Elephant Centre". Dolphin Diaries Travel Sdn Bhd. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012.
  2. "Welcome to the Kuala Gandah Elephant Orphanage Sanctuary". Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 2 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Simon Richmond (January 2010). Malaysia, Singapore & Brunei. Lonely Planet. pp. 303–304. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-887-2. பார்க்கப்பட்ட நாள் 2 August 2011.

மேலும் காண்க

தொகு