கொல்மார் இடைப்பகுதி

(கோல்மார் இடைவெளிச் சண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொல்மார் இடைப்பகுதி சண்டை (Battle of Colmar Pocket) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. தெற்கு பிரான்சில் நாசி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த கொல்மார் இடைப்பகுதியை நேச நாட்டுப்படைகள் கைப்பற்றின.

கொல்மார் இடைப்பகுதி சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

கொல்மார் இடைப்பகுதி வரைபடம்
நாள் ஜனவரி 20 - பெப்ரவரி 9, 1945
இடம் 48°4′50″N 7°21′36″E / 48.08056°N 7.36000°E / 48.08056; 7.36000 (Colmar)
Alsace
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 பிரான்சு
 ஐக்கிய அமெரிக்கா
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய அமெரிக்கா ஜேகப் டேவர்ஸ்
பிரான்சுஜான் டி லேட்டர் டி தசிக்னி
பிரான்சு ஆன்ட்வான் பெதுவார்ட்
பிரான்சு கோய்ஸ்லார்ட் டி மொன்சாபெர்ட்
ஐக்கிய அமெரிக்கா ஃபிராங்க் மில்பர்ன்
நாட்சி ஜெர்மனி ஹைன்ரிச் ஹிம்லர்
நாட்சி ஜெர்மனி சிக்ஃபிரைட் ராஸ்ப்
நாட்சி ஜெர்மனி எரிக் ஆபிரஹாம்
நாட்சி ஜெர்மனி மாக்ஸ் கிரிம்மெய்ஸ்
பலம்

5 பிரெஞ்சு காலாட்படை டிவிசன்கள்
3 பிரெஞ்சு கவச டிவிசன்கள்
3 அமெரிக்கத் காலாட்படை டிவிசன்கள்
1 அமெரிக்க கவச டிவிசன்
7 காலாட்படை டிவிசன்கள்
1 மலைப்படை டிவிசன்
1 பான்சர் (கவச) பிரிகேட்
இழப்புகள்
பிரான்சு: 13,390[1]
அமெரிக்கா: 8,000[2]
22,000-38,500[3]

கொல்மார் இடைப்பகுதி என்பது பிரான்சின் அல்சேஸ் பகுதியில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த ஒரு சிறு பகுதியைக் குறிக்கும். ஜூன் 1944ல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் மூலம் நேசநாட்டுப் படைகள் பிரான்சின் மீது படையெடுத்தன. அடுத்த சில மாதங்களில் பிரான்சிலிருந்த ஜெர்மானியப்படைகள் பெரும்பாலும் வெளியேற்றப்பட்டுவிட்டன. நவம்பர் மாத இறுதியில் பிரான்சின் ஒரு சில பகுதிகள் மட்டுமே ஜெர்மானியப் படைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. பிரெஞ்சு-ஜெர்மானிய எல்லையிலுள்ள அல்சேஸ் பகுதியில் கொல்மார் நகரைச் சுற்றியுள்ள சிறு பகுதி மட்டும் ஜெர்மானியர் வசமிருந்தது. இப்பகுதியின் மூன்று பக்கங்களிலும் உள்ள பகுதிகள் நேசநாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டுவிட்டன. இந்த வட்ட வடிவிலான பாலமுகப்பு (bridgehead) கொல்மார் இடைப்பகுதி என்றழைக்கப்பட்டது. அல்சேசும் அதன் அருகிலுள்ள லொரைன் பகுதியும் யாருக்கு சொந்தம் என்பதில் சில நூற்றாண்டுகளாக பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் சர்ச்சை இருந்தது. ஜெர்மனி இவ்விரு பகுதிகளையும் தனக்கு சொந்தமெனக் கருதியதால் இவற்றைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்தது. ஜூன்-நவம்பர் 1944ல் நேச நாட்டுப் படைகள் பிரான்சில் வெகு விரைவாக முன்னேறியதால், அவற்றுக்குத் தேவையான தளவாடங்களை அனுப்புவதில் சிக்கலேற்பட்டது. வெகு தூரம் முன்னேறி விட்டதால், போதிய தளவாடங்களின்றி நேசநாட்டு முன்னேற்றம் கொல்மார் இடைப்பகுதியைக் கைப்பற்றும் முன்னரே தடைபட்டுவிட்டது.

டிசம்பர் 1944ல் ஜெர்மனி நிகழ்த்திய பல்ஜ் தாக்குதல் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சில் எஞ்சியிருந்து ஜெர்மானியக் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் பக்கம் நேசநாட்டுப் படைகளின் கவனம் திரும்பியது. ஜனவரி 20, 1945ல் கொல்மார் இடைப்பகுதியை மீட்கும் முயற்சி தொடங்கியது. பிரெஞ்சுப் படைப்பிரிவுகளும், அமெரிக்கப் படைப்பிரிவுகளும் இத்தாக்குதலில் ஈடுபட்டன. 1944-45ல் ஐரோப்பாவில் குளிர் காலம் வழக்கத்துக்கு மாறாகக் கடுமையாக இருந்தது. மிகுதியான பனிப்பொழிவும் உறைய வைக்கும் குளிரும் படை முன்னேற்றங்களைத் தாமதப்படுத்தின. இரு தரப்புகளும் கடும் குளிரில் மோதின. கொல்மார் இடைப்பகுதியின் தெற்குப்புறத்தில் பிரெஞ்சு 1வது கோரும் வடக்கில் அமெரிக்க படைப்பிரிவுகள் அடங்கிய பிரெஞ்சு 2வது கோரும் தாக்கின. இரு வாரங்கள் கடுமையான சண்டைக்குப் பிறகு கொல்மார் இடைப்பகுதி நேசநாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது. கடும் ஜெர்மானிய எதிர்ப்பும், மோசமான தட்பவெட்ப நிலையும் இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின. பெப்ரவரி 9ம் தேதி கொல்மார் இடைவெளி முழுவதும் ஜெர்மானியப் படைகளிடமிருந்து மீட்கப்பட்டது. இச்சண்டை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்து ஜெர்மனி மீதான படையெடுப்பு தொடங்கியது.

மேற்கோள்கள்

தொகு
  1. De Lattre, p. 398
  2. Clarke and Smith, p. 556
  3. Clarke and Smith, p. 556–557.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்மார்_இடைப்பகுதி&oldid=1358024" இலிருந்து மீள்விக்கப்பட்டது