கோழிக்கோடு அரசு மனநல மையம்
இந்தியாவின் கேரளாவிலுள்ள மருத்துவமனைகள்
கோழிக்கோடு அரசு மனநல மையம் (Government Mental Health Centre, Kozhikode) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு நகரில் அமைந்துள்ளது. புதியாரா பொட்டமல் சாலையில் அமைந்துள்ள பொது மனநல மருத்துவமனை நிறுவனமான இது கேரள அரசால் நடத்தப்படுகிறது.[1] இம்மருத்துவமனை கேரளாவின் வடக்குப் பகுதி மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இம்மருத்துவமனை சேவை செய்கிறது.
கேரள அரசு | |
---|---|
அமைவிடம் | கோழிக்கோடு, Kerala, இந்தியா |
மருத்துவப்பணி | பொது |
வகை | சிறப்பு மருத்துவமனை |
இணைப்புப் பல்கலைக்கழகம் | சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கேரள அரசு |
அவசரப் பிரிவு | ஆம் |
படுக்கைகள் | 474 |
நிறுவல் | 1872 |
வலைத்தளம் | [gmhckkd Government Mental Health Centre, Kozhikode] |
பட்டியல்கள் |
குறிப்பிடத்தக்க நபர்கள்
தொகு- மருத்துவர் எசு. சாந்தகுமார்: 1962 ஆம் ஆண்டில் மருத்துவமனையின் கண்காணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இம்மருத்துவமனை வரலாற்றில் முதல் தகுதி பெற்ற மனநல மருத்துவரும் இவரேயாவார்.[2]
- மருத்துவர் ஆர்.எல். சரிதா: மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர் மற்றும் இப்போது கேரள அரசின் சுகாதார சேவைகள் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.[3]
- மருத்துவர் என். ராசேந்திரன், மருத்துவமனையின் முன்னாள் கண்காணிப்பாளர்.[4]
- மருத்துவர் கே.சி இரீமாசன், கண்காணிப்பாளர் (2018 முதல்).[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala State Mental Health Authority – Government Mental Health Centres Details". ksmha.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ "Psychiatrist S. Santhakumar dead". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ "Dr. R.L. Saritha, Director of Health Services Kerala explaining about disaster control room". YouTube/ Kerala Health Online Training. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ "Language Experts to find whereabouts of inmates of Mental Health Centre: Dr. N. Rajendran". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
- ↑ "Kozhikode Mental Health Centre to start DNB Course: Dr K.C. Remasan". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.