கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, ஒசூர்
கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி (college of poultry production and management, Hosur) என்பது கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தமிழக அரசால் நடத்தப்படும் கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.[2] இக்கல்லூரி 8, ஆகத்து, 2011 ஆம் ஆண்டு தமிழக அரசால் துவக்கப்பட்டது. 2011-12 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் வளாகம் 80 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கல்லூரி வளாகம் ஒசூர் மத்திகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை வளாகத்தில் உள்ளது. இக்கல்லூரியில் ஆண்டுக்கு 40 மாணவர்களை சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
வகை | அரசு கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 8, ஆகத்து 2011 |
சார்பு | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
அமைவிடம் | , , |
இக்கல்லூரியில் இளங்கலை தொழில் நுட்பம் (கோழியின தொழில்நுட்பம்) பாடமானது நான்கு ஆண்டு படிப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கப்படுகின்றனர்.[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ கோழி வளர்ப்பு மற்றும் மேலாண்மை கல்லூரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரக இணையதளம்
- ↑ "கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை! - Kungumam Tamil Weekly Magazine". kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.
- ↑ K.Rajeshwari,Reporter (2021-09-23). "கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2022-09-19.