மாவட்ட கால்நடை பண்ணை (ஒசூர்)

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கால்நடைப் பண்ணை

மாவட்ட கால்நடை பண்ணை, ஒசூர் (அல்லது ஒசூர் கால்நடை பண்ணை), தமிழ்நாடின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரின், மத்திகிரியில் உள்ளது. இந்தப் பண்ணை 1,641.41 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இங்கு ஜெர்சி மாடுகள், ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப்பினம், சிவப்பு சிந்தி, காங்கேயம் ஆகிய மாட்டினங்களும், மேச்சேரி செம்மறி, திருச்சி கருப்பு செம்மறி போன்ற செம்மறி ஆடுகளும், கொடி ஆடு, தலைச்சேரி போன்ற வெள்ளாட்டு இனங்களும், லார்ஜ் ஒயிட் யார்க்‌ஷயர் வெண் பன்றி இனமும், கத்தியவார், தூய இனம் ஆகிய குதிரை இனங்களும், கிரிராஜா, அசில், வெள்ளை லெக்கார்ன் ஆகிய கோழி இனங்களும், வான்கோழிகள் ஆகியவை [1] வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.

வரலாறு

தொகு

ஓசூரில் உள்ள கால்நடை பண்ணை 1824ஆம் ஆண்டு குதிரை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் பிரித்தானிய அரசாங்கத்தால் நிறுவப்பட்டது. இந்த பண்ணை செப்டம்பர் 1924 அன்று மதராஸ் அரசாங்கத்திடம் இருந்து வேளாண்மைத்துறையிடம் கால்நடை இனப்பெருக்க நிலையமாக ஒப்படைக்கப்பட்டது. பின் இந்த பண்ணை மதராஸ் பொது கால்நடைத்துறையிடம் 1938-39 முதல் ஒப்படைக்கப்பட்டது அதனுடன் இணைந்து இந்திய பாலூட்டி விலங்கினங்களை பராமரிப்பின் தரத்தின் மற்றும் அடிப்படை கால்நடை இனப்பெருக்க ஆய்வு மையமாகவும் பின் இது மறுவடிவமைக்கப்பட்டு கால்நடை ஆய்வு மையமாகக் மாற்றி அமைக்கப்பட்டது. பின் இது கால்நடை பண்ணையாகவும் அதைத்தொடர்ந்து இது சீரமைக்கப்பட்டு கால்நடை ஆய்வு மையமாக முதலாம் சனவரி 1970யில் மாற்றப்பட்டது. இங்கு தமிழகரசு குழிப்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆலோசனை செய்துள்ளது.[சான்று தேவை] இந்த பண்ணை ஆசியாக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பண்ணைகளில் ஒன்று ஆகும்.

கால்நடைப்பண்ணையில் உள்ள பிரிவுகள்

தொகு

1640.42 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இப்பண்ணையில் 12 பிரிவுகள் உள்ளன அவை:

  1. மாட்டுப்பண்ணை
  2. கோழிப்பண்ணை
  3. செம்மறி ஆட்டுப்பண்ணை
  4. பன்றிப்பண்ணை
  5. கிடாரிப்பண்ணை
  6. பால்ப்பண்ணை
  7. மருத்துவமனை
  8. உறைவிந்து உற்பத்தி நிலையம்
  9. புல்வெளிப் பிரிவு
  10. தீவனப் புல் உற்பத்திப் பிரிவு
  11. பட்டறைப் பிரிவு
  12. காளை மற்றும் குதிரைகள் பண்ணை

மேற்கோள்கள்

தொகு
  1. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.