கோவா கொங்கணி அகாடமி
கோவா கொங்கணி அகாடமி (Goa Konkani Akademi) என்பது கோவாவில் கொங்கணி மொழியை மேம்படுத்துவதற்காக 1986 ஆம் ஆண்டு கோவா அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களை ஊக்குவிப்பதன் மூலம் கொங்கணி மொழியின் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதும், அனைத்து பகுதிகளிலிருந்தும் கொங்கணியர்களை ஒன்றிணைப்பதும் இவ்வமைப்பின் நோக்கமாகும். [1]
அமைப்பு
தொகுகோவா கொங்கணி அகாடமி 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஒரு தன்னாட்சி அமைப்பாகவும் கோவா மாநிலத்தின் அதிகார வரம்பைக் கொண்டதாகவும் இயங்குகிறது.[2] கொங்கணி மொழியின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. கோவா அரசாங்கத்திடமிருந்து மானியங்களைப் பெறுகிறது.
தற்போதைய அகாடமி தலைவராக புண்டலிக் நாயக் 2002 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறார். முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான புருசோத்தம் ககோட்கர் (1984-1996), வழக்கறிஞரும் எழுத்தாளருமான உதய் பெம்ப்ரே (1996-2002).[3] ஆகியோர் இப்பொறுப்பில் இருந்தனர்.
குறிக்கோள் மற்றும் நோக்கம்
தொகுகோவா கொங்கணி அகாடமி கொங்கணி மொழியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது. இதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய இலக்குகள்:
- கொங்கணி மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சிக்கான திட்டம் அல்லது திட்டங்களைத் தொடங்குதல், உதவுதல் அல்லது செயல்படுத்துதல்.
- அத்தகைய ஆராய்ச்சியின் முடிவுகளை கொங்கணி மொழியில் வெளியிட உதவுவதல் அல்லது மேற்கொள்ளுதல்.
- அசல் மற்றும் ஆராய்ச்சித் தாள்கள், தனிக்கட்டுரைகள் , புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பிற அறிவுப் பிரிவின் எந்தப் படைப்புகளையும் கொங்கணி மொழியில் வெளியிடத் தொடங்குவதற்கு, உதவுதல் அல்லது மேற்கொள்ளுதல் .
கோவா அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் அகாடமி அதன் செயல்பாடுகளை மேற்கொள்கிறது. இது கொங்கணி தொடர்பாக பல்வேறு கொள்கைகளை வகுப்பதில் மாநில அரசுக்கு உதவுகிறது. [2]
செயல்பாடுகள்
தொகுஅகாடமி பல்வேறு செயல்பாடுகளை நடத்துகிறது
- ஒரு புதிய எழுத்தாளரின் முதல் புத்தகத்திற்கு நிதி உதவி (செலவில் 75%) வழங்குதல்.
- வெளியீட்டாளர்களுக்கு 50% நிதி உதவி வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு புத்தகத்தின் 100 பிரதிகளை வாங்குகிறது.
- நாட்டுப்புறவியல் பற்றிய ஒரு பகுதியாக இயங்குகிறது.
- கொங்கணியில் அகராதி மற்றும் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
- கோவாவில் அரசாங்க வேலைகளுக்குத் தேவையான "கொங்கணி மொழி அறிவு" சான்றிதழ் தேர்வை நடத்துகிறது. மற்ற சான்றிதழ் தேர்வுகளும் உண்டு.
- 1993 [2] ஆம் ஆண்டு முதல் ஐந்து நாள் வருடாந்திர கலாச்சார நிகழ்வை ஏற்பாடு செய்தது.
நிறுவன கட்டமைப்பு
தொகுஅகாடமியின் அமைப்பு பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது
- கல்விப் பிரிவு : முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகள்; ஆசிரியர் பயிற்சி
- அகராதிப் பிரிவு : கொங்கணி கலைக்களஞ்சியம் மற்றும் அகராதிகளின் உருவாக்கம்
- நாட்டுப்புறவியல் பிரிவு : நாட்டுப்புறவியல் தொடர்பான பல்வேறு ஊடகங்களின் தொகுப்பு
- இலக்கியப் பிரிவு : பல்வேறு வெளியீடு திட்டங்களை மேற்பார்வையிடுகிறது
- கலாச்சாரப் பிரிவு : நாடகம் மற்றும் ஆவணப்படங்கள். [4]
தலைமைத்துவம்
தொகுஅகாடமியின் தொடக்கத்தில் இருந்து பின்வரும் [5] தலைவர்கள் பொறுப்பில் இருந்தனர்..
ஜனாதிபதி | தேதி |
---|---|
புருசோத்தம் ககோட்கர் | 1984-1993 |
புருசோத்தம் ககோட்கர் | 1993-1996 |
புருசோத்தம் ககோட்கர் | 1996, ஜனவரி முதல் அக் |
உதய் எல். பெம்ப்ரே | 1996-1999 |
உதய் எல். பெம்ப்ரே | 1999-2002 |
புண்டலிக் என். நாயக் | 2002-2005 |
புண்டலிக் என். நாயக் | 2005-2008 |
என். சிவதாசு | 2009-2011 |
திலீப் போர்கர் | 2012 ஜனவரி-ஏப் |
புண்டலிக் என். நாயக் | 2012-2015 |
மாதவ் போர்க்கர் | 2015-2017 |
இயக்குனர், அலுவல் மொழி இயக்குநரகம் | 2017-2019 |
சுரேசு குண்டு அமோங்கர் | 2019 |
விமர்சனம்
தொகுகடந்த காலத்தில் உரோமானிய எழுத்துக்களில் கொங்கணி வெளியீடுகள் இருந்ததாகக் அகாடமி மீது குற்றம் சாட்டப்பட்டது. கோவாவில் உள்ள இரு பெரும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ( இந்துக்கள் மற்றும் கிறித்தவர்கள் ) சுழற்சி முறையில் அகாடமியின் தலைவராக இருக்க வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கையாகும்.[6]
மார்ச் 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அகாடமியின் மூன்று முக்கிய உறுப்பினர்கள்—தலைவர் மாதவ் போர்கர், துணைத் தலைவர் இயோசு லோரெங்கோ மற்றும் உறுப்பினர் கமலாகர் மல்சி— "பல்வேறு கொங்கணி மொழி மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து நிதி பெறுவதில் உள்ள சிக்கல்களைக் காரணம் காட்டி" தங்கள் பதவிகளைத் துறந்தனர். [7]
அகாடமி நிராகரித்த அல்லது ஆதரிக்க மறுத்த சில புத்தகங்கள் மீது சர்ச்சைகள் உள்ளன. [8]
அகாடமி ஒரு புத்தக வெளியீட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது, ஆனால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களின் தெரிவுநிலை சாத்தியமானவற்றுக்கு போதுமானதாக இல்லை. "குறைந்த விலை, விநியோக-விளிம்பு கொள்கை" ஒரு காரணமாகும். இது விநியோகப்பவர்களின் ஆர்வமின்மைக்கும் புத்தகங்களுக்கு குறைந்த வாசகர்கள் இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம். [9]
அமைவிடம்
தொகுகோவா கொங்கணி அகாடமியின் அலுவலகம் கோவாவின் பனாசியில் உள்ள பட்டோ காலனியில் அமைந்துள்ளது. [2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Goa Konkani Akademi". பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Citizens' Charter Goa Konkani Akademi". Archived from the original on 2009-02-24. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link). Archived from the original on 24 February 2009. Retrieved 1 June 2009. - ↑ "Officers Of Goa Konkani Akademi". Archived from the original on 23 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
- ↑ "GKA". Archived from the original on 24 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-06-01.
- ↑ "List of President, Vice-President and Secretary till date | Konkani Academy". konkaniakademi.goa.gov.in. Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ Lopes, Nelson. "Konkaniworld - Script for Konkani". Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.
- ↑ "Konkani Akademi Chairman, dy quit". oHeraldo. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ "'Poetry, for me, is an archive of social relations'". The Indian Express (in ஆங்கிலம்). 2020-01-19. பார்க்கப்பட்ட நாள் 2020-11-11.
- ↑ Noronha, Frederick. "Learn Konkani, the Romi way". பார்க்கப்பட்ட நாள் 2009-06-03.