கோவிந்த் கவுடே

இந்திய அரசியல்வாதி

கோவிந்த் கவுடே (Govind Gaude) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். கவுடே வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள பிரியோல் தொகுதியிலிருந்து கோவா சட்டமன்ற 2017ஆம் ஆண்டு தேர்தலில் சுயேச்சை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னர் இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் கட்சி வேட்பாளராக 2007ஆம் ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தலில் மார்கெய்ம் தொகுதியில் போட்டியிட்டார்.[1][2][3] கவுடே தற்போது, பிரமோத் சாவந்த் அமைச்சரவையில் கலை மற்றும் கலாச்சாரம், குடிமைப்பொருள் வழங்குதல் மற்றும் விலைக் கட்டுப்பாடு மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.[4]

கோவிந்த் கவுடே
அமைச்சர்-கலை மற்றும் கலாச்சாரம், குடிமைப்பொருள் வழங்குதல் மற்றும் விலைக் கட்டுப்பாடு மற்றும் பழங்குடியினர் நலத்துறை
சட்டமன்ற உறுப்பினர் கோவா சட்டமன்றம்
பதவியில்
2017–2022
முன்னையவர்தீபக் தெளவலிகர்
தொகுதிபிரியோல் (வட கோவா)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 அக்டோபர் 1971 (1971-10-02) (அகவை 53)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசுயேச்சை
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்
  • செபு டி. கவுடே (தந்தை)
முன்னாள் கல்லூரிஅரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, பனாஜி
தொழில்ஒப்பந்ததாரர்

2022 தேர்தல்

தொகு

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் பிரியோல் தொகுதியிலிருந்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Govind Gaude". Archived from the original on 2018-07-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  2. My Neta
  3. "Council Of Ministers". Archived from the original on 2017-07-01. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
  4. Goa Forward eyes Congress turf to expand base In Priol, Govind Gaude may just topple Dhavalikar’s applecart
  5. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS0520.htm?ac=20

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்த்_கவுடே&oldid=3583732" இலிருந்து மீள்விக்கப்பட்டது