கோவிந்த் நரேன்
கோவிந்த் நரேன் (Govind Narain) என்பவர் (5 மே 1916 – 3 ஏப்ரல் 2012) ஒரு இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ஆவார். நரேன் கர்நாடகாவின் 8வது ஆளுநராக பணியாற்றினார்.
கோவிந் நரேன் | |
---|---|
8வது கருநாடக ஆளுநர் | |
பதவியில் 2 ஆகத்து 1977 – 15 ஏப்ரல் 1983 | |
முன்னையவர் | உமா சங்கர் தீட்சித் |
பின்னவர் | அஷோக்நாத் பானர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மைன்புரி, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 5 மே 1916
இறப்பு | 3 ஏப்ரல் 2012 புது தில்லி, இந்தியா | (அகவை 95)
இவர் முன்னர் இந்தியாவின் 12வது பாதுகாப்பு செயலாளராக 1973 முதல் 1975 வரையும், இந்தியாவின் உள்துறை செயலாளராக 1971 முதல் 1973 வரையும் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் தலைமைச் செயலாளராக 1958 முதல் 1961 வரையும் பணியாற்றி உள்ளார்.[1] இவர் 1951 முதல் 1954 வரை நேபாள மன்னரின் ஆலோசகராகவும் செயலாளராகவும் பணியாற்றினார்.
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தொகுநரேன் உத்தரப்பிரதேசத்தின் மைன்புரியில் காயஸ்தா குடும்பத்தில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.
பணி
தொகுநரேன் 1939-ல் இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்தியாவின் உள்துறை செயலாளராகவும், இந்தியாவின் பாதுகாப்பு செயலாளராகவும் இருந்தார். உள்துறை செயலாளராக, 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இவர் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் இவர் பாதுகாப்பு செயலாளராக ஆனார். 1973 மற்றும் 1975க்கு இடையில் இவர் பதவி வகித்தார். இவர் உத்தரப்பிரதேசத்தின் தலைமைச் செயலாளராகவும் இருந்தார். மேலும் நேபாள மன்னரின் ஆலோசகராக 1951-ல் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான உறவுகளை உருவாக்கப் பணியமர்த்தப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகுநரேன், கர்நாடகாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1977 மற்றும் 1983க்கு இடையில் இவர் பதவியில் இருந்தார். இவருக்கு 2009ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம விபூசண் விருதினை வழங்ககியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangladesh war-era Home Secretary Govind Narain dies". 4 April 2012.