கோவை சதாசிவம்
கோவை சதாசிவம் என அறியப்படும் கந்தசாமி சதாசிவம் (பிறப்பு: 23 செப்டம்பர் 1961) தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளர், கதைசொல்லி, ஆவணப்பட இயக்குநர், மற்றும் பேச்சாளர் ஆவார்.
கோவை சதாசிவம் | |
---|---|
பிறப்பு | கந்தசாமி சதாசிவம் 23 செப்டம்பர் 1961 கோயம்புத்தூர், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், ஆவணப்பட இயக்குநர் |
அரசியல் இயக்கம் | தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் |
பெற்றோர் | வள்ளியம்மாள் (தாய்) கந்தசாமி (தந்தை) |
வாழ்க்கைத் துணை | அமுதா |
பிள்ளைகள் | மதன் மோகன் (மகன்) சுப சந்தியா (மகள்) |
இளமை
தொகுகோயம்புத்தூர் மாநகரில் 23 செப்டம்பர் 1961 அன்று வள்ளியம்மாள்-கந்தசாமி இணையரின் தலைமகனாகப் பிறந்தார் சதாசிவம். இவர் உடன்பிறந்தோர் நான்கு ஆண்கள் இரண்டு பெண்கள்.
கல்வியும் தொழிலும்
தொகுபொருளியப் பின்புலம் அற்ற குடும்பச்சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்ட சதாசிவம், ஒரு கடைசல் இயந்திரப் பட்டறையில் வேலை பார்த்தார். அதன்பின் மிதிவண்டிக் கடை வைத்திருந்தார். பின்னலாடைத் தொழிலாளியாகவும் இருந்தார்.
சுற்றுச்சூழல் செயல்பாடுகள்
தொகுதற்போது பள்ளி கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியளித்தல் உள்ளிட்ட முழுநேர சுற்றுச் சூழல் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நூல்கள்
தொகுபின்னல் நகரம் எனும் இவரது நூல் திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்பட்ட சூழல் மாசுபாட்டைப் பேசுகிறது. ஊர்ப்புறத்துப் பறவைகள் எனும் நூலில் தமிழக ஊர்ப்புறங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றி விவரித்துள்ளார்.
இவரின் பிறநூல்கள்:[1]
- ஆதியில் யானைகள் இருந்தன
- உயிர்ப்புதையல்
- தவளை
- பூச்சிகளின் தேசம்
- இறகுதிர்காலம்
- சில்லுக்கோடு
- காலநிலை மாநாடு: பேச மறந்தவை
- நாட்டு விலங்குகள்
- கழுதைப்புலி: ஒரு கானகத் தூய்மையாளன்
- பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு
- காலம் நடந்த பெருவழி
- மரப்பேச்சி
- இறகுதிர் காலம்
- நம்ம கழுதை நல்ல கழுதை
- பல்லி: ஓர் அறிவியல் பார்வை
- மயிலு
ஆவணப்படங்கள்
தொகு- மண் - சாயக்கழிவுகள் குறித்தது
- சிட்டு (குருவிகளைத் தொலைத்த மனிதர்கள் குறித்தது)
- மயில்
- புகலிடம் தேடி
- நல்லாறு
விருதுகள்
தொகு- வேரடி மண் (கவிதை நூல்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
- இரை (கவிதை நூல்), தேவமகள் இலக்கிய அறக்கட்டளை விருது
- நம்மாழ்வார் விருது -2019
- விகடன் விருது-2019
தனி வாழ்க்கை
தொகுஇவர் இணையர் பெயர் அமுதா. இவர்களுக்கு மதன் மோகன் என்ற மகனும் சுப சந்தியா என்ற மகளும் உள்ளனர்.
வெளி இணைப்புகள்
தொகு- எழுத்தாளர் கோவை சதாசிவம்
- பூவுலகின் நண்பர்கள் [1] தளத்தில் கோவை சதாசிவம் குறித்த செய்தி
- சத்யம் செய்திகளில் சத்யம் செய்திகளில் கரையான் பற்றிய சதாசிவம் அவர்களின் உரையாடல்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "எழுத்தாளர் கோவை சதாசிவம்" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.