கோ. பழனிச்சாமி
கோ. பழனிச்சாமி (G. Palanisamy)(பிறப்பு 1 சூலை 1948) இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1989,[1] 1991,[2] 1996[3] 2001ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதி பட்டியலினத்தைச் சார்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும்.[4]
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைச் செயலாளராக இருந்தார்.[5]அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் தேர்தல் ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய பொதுவுடைமைக் கட்சியுடன் (மார்க்சிஸ்ட்) கூட்டணியில் இருந்த போது 2014ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தலில் நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ 1991 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 9. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ Rajaram, R. (23 March 2011). "CPI releases list of 10 candidates". The Hindu. http://www.thehindu.com/news/national/tamil-nadu/CPI-releases-list-of-10-candidates/article14958524.ece. பார்த்த நாள்: 2017-05-10.
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Lok Sabha elections 2014 results: Landslide victory for AIADMK in Tamil Nadu". The Times of India. 16 May 2014. http://timesofindia.indiatimes.com/news/Lok-Sabha-elections-2014-results-Landslide-victory-for-AIADMK-in-Tamil-Nadu/articleshow/35186180.cms. பார்த்த நாள்: 2017-05-10.