கௌதம சன்னா (Gowthama Sanna) இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கான மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். சமூக-அரசியல் ஆர்வலராகவும், சித்தாந்தவாதியாகவும் ஓர் எழுத்தாளராகவும் நன்கு அறியப்படுகிறார்.[சான்று தேவை] தலித் அரசியல் மற்றும் சமூகவியல் படைப்பாளியான இவர் 1995 ஆம் ஆண்டு முதல் பல தமிழ் இதழ்களில் என்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவர் பிறருக்கு உதவி செய்யும் குணம் கொண்டவர் மற்றும் எல்லோரிடமும் அன்பாக பேசுபவர்.[1]

அரசியல் பணிகள்

தொகு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்து வந்த இவர் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளராக இயங்கி வருகிறார். இக்காலக்கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை செயல் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு பல லட்சம் உறுப்பினர்களை கட்சியில் உறுப்பினர்களாக இணைத்தார். 2021 ஆம் ஆண்டில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் சார்பாக சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டார்.[1] [2]ஜெய்பீம் அறக்கட்டளை மற்றும் ஜெய்பீம் 2.0 -திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராகவும் அம்பேத்கரியம் என்ற நூலின் 50 தொகுதிகளின் தொகுப்பாசிரியராகவும் மற்றும் ஊர்தோறும் அம்பேத்கர் படிப்பகம் உருவாக்கும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கட்சியின் பல்வேறு முகாம்கள் நடத்தியது மற்றும் 2012 ஆம் ஆண்டில் இணைய மாநாடு நடத்தியது போன்றவை கௌதம சன்னாவின் குறிப்பிடத்தக்க சில பணிகளாகும்.

சமுகப் பணிகள்

தொகு

2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கத்தின் நிறுவனராகவும் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வ்ருகிறார்.[3]. 1996 ஆம் ஆண்டில் அம்பேத்கரிய பயிற்சிப் பள்ளி மற்றும் சமூக மாற்றத்திற்கான அமைப்பை நிறுவினார். அம்பேத்கரியம் மற்றும் தலித் வரலாற்று ஆவணங்களை மக்கள் மயப்படுத்துவதும் இவ்வியக்கத்தின் நோக்கமாகும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தலித் சுவடுகள் புகைப்படக் கண்காட்சிகளையும் ஏராளமானக் கருத்தரங்குகளையும் நடத்தினார். உயர்கல்வி மற்றும் உயராய்வுக் கல்வித் துறைகளில் மறுக்கப்பட்ட இடஒதுக்கீட்டினைப் பாதுகாக்கும் நோக்கில் அணைத்துக் கல்லூரி தலித் மாணவ மாணவியர் பேரவையை உருவாக்கினார். தர்மபுரி மாணவியர் 3 பேர் பேரூந்தில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்த்து பெரிய போராட்டத்தை ஒருங்கிணைத்தார். இதன் விளைவாக விசாரணைக் கமிசன் அமைப்பதற்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கும் காரணமான போராட்டமாக இப்போராட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

2003-2005 ஆம் ஆண்டுகளில் தென்னிந்திய தலித் எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் பேரவையின் பொதுச் செயலாளராக[4] ஒரு மாநாடு, பல கருத்தரங்குகள் மற்றும் ஏராளமான பயிலரங்குகளை இவ்வமைப்பு மூலம் நடத்தினார். பஞ்சமி நில மீட்பு இயக்கத்தை தமிழகம் முழுமைக்கும் கட்டமைத்ததுடன் மாநிலந் தழுவியப் போராட்டங்களையுன் இவ்வமைப்பு முன்னெடுத்தது.

சமூகப்பணிகள் மீது தீராப் பற்றும், நேர்மையும், நெஞ்சுறமும் கொண்டவர்.

இலக்கியப் பணிகள்

தொகு
  1. மதமாற்றத் தடைச்சட்டம் வரலாறும் விளைவகளும்[5]
  2. பண்டிதரின் கொடை[6]
  3. க.அயோத்திதாச பண்டிதர்,
  4. குறத்தியாறு
  5. திருவள்ளுவர் யார்?
  6. கலகத்தின் மறைபொருள்,
  7. இட ஒதுக்கீட்டின் மூல வரலாறு,
  8. Dialogues on Anti Castes Politics.
  9. அம்பேத்கரின் மனிதர்.
  10. அம்பேத்கரியம் வழிகாட்டி

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தொடரும் உள்ளடி: கொந்தளித்த திருமா - என்ன நடக்கிறது வி.சி.கவில்?", BBC News தமிழ், பார்க்கப்பட்ட நாள் 2024-05-04
  2. "வி.சி.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/Mar/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3581828.html. பார்த்த நாள்: 4 May 2024. 
  3. "தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப்பேரவை விகார் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது". நவ் இந்தியர் டைம்சு. https://nowindiartimes.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/. பார்த்த நாள்: 4 May 2024. 
  4. "ஆதியில் தமிழர்கள் பின்பற்றிய மதம் பௌத்தம்” – கௌதம சன்னா". வல்லினம். https://vallinam.com.my/version2/?p=4973. பார்த்த நாள்: 4 May 2024. 
  5. "THF Announcement: E-books update:2​6​/6/2016 *மதமாற்ற தடை சட்டம் – வரலாறும் விளைவுகளும்". தமிழ்மரபு அறக்கட்டளை. https://thf-news.tamilheritage.org/2016/06/26/thf-announcement-e-books-update2%E2%80%8B6%E2%80%8B-6-2016-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/. பார்த்த நாள்: 4 May 2024. 
  6. LTD, MUKIL E. PUBLISHING & SOLUTIONS PVT (2022-09-14), பண்டிதரின் கொடை விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை (in ஆங்கிலம்), Mukil E Publishing And Solutions Private Limited, பார்க்கப்பட்ட நாள் 2024-05-04
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌதம_சன்னா&oldid=4118404" இலிருந்து மீள்விக்கப்பட்டது