கௌளிபந்து
கௌளிபந்து பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின
கௌளிபந்து பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
தொகுஇந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), காகலி நிசாதம் (நி3), சுத்த தைவதம் (த1), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
ஆரோகணம்: | ச ரி1 ம1 ப நி3 ச் |
அவரோகணம்: | ச் நி3 த1 ப ம1 த1 ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் எல்லாச் சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.
வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
---|---|---|---|
கிருதி | தெரதீயகராதா | தியாகராஜ சுவாமிகள் | ஆதி |
கிருதி | நமக்கினி | கோபாலகிருஷ்ண பாரதியார் | ஆதி |
கிருதி | ஜெகன்னாதா | வேதநாயகம் பிள்ளை | ஆதி |
கிருதி | தருணமீதம்மா | சியாமா சாஸ்திரி | ஆதி |
கிருதி | அம்பா உனை | கவிகுஞ்சர பாரதியார் | மிச்ர சாபு |
கிருதி | பரபிரம்ம | அருணாசல கவிராயர் | மிச்ர சாபு |
கிருதி | எந்த பாபி | தியாகராஜ சுவாமிகள் | மிச்ர சாபு |
கிருதி | அனந்த பத்மநாபா | சுவாதித் திருநாள் ராம வர்மா | மிச்ர சாபு |
கிருதி | கிருஷ்ணானந்த | முத்துசுவாமி தீட்சிதர் | மிச்ர ஏகம் |
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.