க. ப. அறவாணன்

தமிழர் ஆய்வாளர்
(க.ப. அறவாணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

க. ப. அறவாணன் (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், இந்தியா, தமிழ்நாடு, சென்னை அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி (தஞ்சாவூர் மாவட்டம்)[1] ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.

க. ப. அறவாணன்
பிறப்புஅருணாசலம்
(1941-08-09)ஆகத்து 9, 1941
தஞ்சாவூர் மாவட்டம்
இறப்புதிசம்பர் 23, 2018(2018-12-23) (அகவை 77)
சென்னை
தேசியம்இந்தியா
கல்விஎம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி.
பணிதமிழ்ப்பேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
தாயம்மாள் அறவாணன்
பிள்ளைகள்அருள்செங்கோர்,

கல்வி

தொகு

சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.

எழுதிய நூல்கள்

தொகு

தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;

  1. அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
  2. அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
  3. அற்றையநாள் காதலும் வீரமும் (முனைவர் பட்ட ஆய்வேடு); தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
  4. கவிதை கிழக்கும் மேற்கும்; 1975, தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29. [2]
  5. காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
  6. கல்வித்துறை உருப்பட
  7. சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை[3]
  8. தொல்காப்பிய ஒப்பியல்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]
  9. தொல்காப்பியக் களஞ்சியம்; 1975; பாரிநிலையம், சென்னை. [2]
  10. தமிழர் தடங்கல்; 1992 மே; தமிழ்க்கோட்டம், 91, இரண்டாவது தெரு, மோகன் நகர், புதுச்சேரி 605 005; பக்.172
  11. தமிழர்தம் தலைமை வழிபாடு
  12. தமிழர்தம் மறுபக்கம்
  13. தமிழரின் தாயகம்; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
  14. தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
  15. தமிழ்ச்சமுதாய நோய்கள்
  16. தமிழ்ச்சமுதாய வரலாறு- முதற்பகுதி
  17. தமிழ் மக்கள் வரலாறு[4]
  18. திராவிடர்
  19. படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம்; 1995; கிரணம் கம்ப்யூட்டர் ஒளி அச்சகம், புதுச்சேரி.
  20. பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
  21. பாதையாகு பாறைகள்: வாழ்க்கை முன்னேற்ற வழிமுறைகள்; 1988 திசம்பர்; தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
  22. புரட்சிப்பொறிகள் (கவிதை)
  23. Collected Papers on Tamilogy

பதிப்பித்த நூல்கள்

தொகு
  1. அவிநயம்:மூலமும் உரையும்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. [2]

இதழ் ஆசிரியர்

தொகு

இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்

  • அறிவியல் தமிழியம்
  • தேடல்
  • முடியும்
  • கொங்கு

பதிப்பாசிரியர்

தொகு

இ.ப.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக்கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.

  1. அருங்கலச்செப்பு; சைன இளைஞர் மன்றம், 1-ஏ, போக் சாலை, சென்னை 600 017.

அறவாணர் விருது

தொகு

இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.

விருதுகளும் கௌரவங்களும்

தொகு
  • தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
  • 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது

நூல்கள் நாட்டுடமையாக்கம்

தொகு

2024 நவம்பரில் அறவாணனின் படைப்புகளை தமிழ்நாடு அரசு நாட்டுடமை ஆக்கி, அவரின் மரபுரிமையாளர்களுக்கு பரிவுத் தொகையாக ரூ 10 இலட்சம் வழங்கியது.[5] [6]

உசாத்துணை

தொகு
  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011

மேற்கோள்கள்

தொகு
  1. "முனைவர் க ப அறவாணன்-நேர்காணல்". archive.is. 2 February 2014. Archived from the original on 2 February 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 தில்லைநாயகம், வே (பதி); நூல்கள் அறிமுகவிழா; தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறை, 1976; பக். 16
  3. http://www.idref.fr/060975016
  4. அறவாணன், க ப; Aṟavāṇaṉ, Ka Pa (23 December 2018). "தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம்". தமிழ்க் கோட்டம், 2013 Ceṉṉai : Tamil̲k Kōṭṭam – via Library Catalog - www.sudoc.abes.fr.
  5. DIN (2024-11-18). "9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
  6. "க.ப.அறவாணன், கவிஞர் கா.வேழவேந்தன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் 9 பேர் நூல்கள் நாட்டுடைமை: வாரிசுகளுக்கு உரிமை தொகை". Hindu Tamil Thisai. 2024-11-19. பார்க்கப்பட்ட நாள் 2024-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ப._அறவாணன்&oldid=4184107" இலிருந்து மீள்விக்கப்பட்டது