க. இராசாராம் நாயுடு

கே. இராசாராம் நாயுடு (K. Rajaram Naidu) தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவரும் ஆவார்.

இராசாராம் நாயுடு
உள்ளாட்சித் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு
பதவியில்
9 அக்டோபர் 1953 – 12 ஏப்ரல் 1954
முதன்மை அமைச்சர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
முன்னையவர்என். சங்கர ரெட்டி
தமிழ்நாடு சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1968–1975
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிருமங்கலம், மதுரை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இளமைப்பருவம்

தொகு

இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணம நாயுடு திருமாலம்மாள் அம்மையாருக்கும் மகனாகப் 1909 பெப்ரவரி 8-இல் பிறந்தார்.

பதவிகள்

தொகு

1952 ஆண்டு திருமங்கலம் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆன இவர் ராஜாஜியின் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.[1][2] இவர் 1957 முதல் 1960 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளார்.[3] தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் தமிழக சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.[4][5] இவர் 28 சனவரி 1985 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Subodh Chandra Sarkar, ed. (1954). Hindustan Year-book and Who's who. Vol. 22. M. C. Sarkar. p. 635.
  2. Jawaharlal Nehru, ed. (1984). Selected Works of Jawaharlal Nehru: Second series. Vol. 24. Jawaharlal Nehru Memorial Fund. p. 287.
  3. லேனா தமிழ்வாணன், ed. (1988). தமிழக மாவட்ட நூல் வரிசை : மதுரை மாவட்டம். மணிமேகலைப் பிரசுரம். p. 161. கே . இராஜாராம் நாயுடு திருமங்கலம் ஊரினரான இவர் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பணியாற்றியவர் .தமிழ் நாடு காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராகவும் பொறுப்பேற்று , மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.
  4. கலைஞர் மு. கருணாநிதி, ed. (1975). நெஞ்சுக்கு நீதி. Vol. இரண்டாம் பாகம். தினமணி கதிர் வெளியீடு. p. 84. ராஜாராம் நாயுடு அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் , அதற்குரிய வசதிகளையும் ஏற்றுக் கொண்டார் .அப்பொழுதுதான் முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கு வசதிகள் என்பதும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது .
  5. A.S. Panneerselvan, ed. (15 March 2021). Karunanidhi: A Life. Penguin Random House India Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789390914548.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இராசாராம்_நாயுடு&oldid=4089702" இலிருந்து மீள்விக்கப்பட்டது