க. முனுசாமி

க. முனுசாமி (பிறப்பு: ஏப்ரல் 15 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். நிலாவண்ணன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் முன்னாள் தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆவார். மேலும் இவர் தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், பேரா மாநில எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1958 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்

தொகு
  • "தைப்பிங் மலைச் சாரலிலே" (சிறுகதைத் தொகுப்பின் தொகுப்பாசிரியர்)

பரிசுகளும் விருதுகளும்

தொகு
  • சிறுகதைகள் போட்டியில் ஐந்து முறை பரிசுகள் - மலாயாப் பல்கலைக்கழகப் பேரவை
  • சிறுகதைக்கான பரிசு - மலேசிய எழுத்தாளர் சங்கம்
  • சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது (2002) - மலேசிய பாரதிதாசன் குழுவினர்

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=க._முனுசாமி&oldid=3237552" இலிருந்து மீள்விக்கப்பட்டது