சகுந்தலா பார்னே
சகுந்தலா பார்னே (Shakuntala Bharne) இவர் ஓர் இந்தியப் பாடகரும், எழுத்தாளரும், கவிஞரும், அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளருமாவார். [1] [2] இவர் கொங்கணி மொழி போராட்டத்தின் எழுத்தாளரும், ஆர்வலருமாவார்.
சகுந்தலா பார்னே | |
---|---|
பணி | பாடுதல், |
அறியப்படுவது | அகில இந்திய வானொலியில் பாடகர், எழுத்தாளர், கவிஞர், அறிவிப்பாளர் |
தொழில்
தொகுஹூப்ளியிலுள்ள கங்குபாய் ஹங்கல் வழிகாட்டுதலின் கீழ் இசையில் பயிற்சி பெற்றார். இவர் இரட்டை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் இசை குறித்து சுவரானந்த் மற்றும் நாதபிரம்மம் என்று இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இதற்காக கோவா கொங்கணி அகாடமி மற்றும் கொங்கனி பாஷா மண்டல் விருதைப் பெற்றார். இவர் பண்டிட் பிரபாகர் கரேக்கரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். [3] கங்குபாய் ஹங்கலுக்கு அஞ்சலி வழங்கும் இசை நிகழ்ச்சியான சுவராஞ்சலியில் கோப் என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். [4] 2014 ஆம் ஆண்டில் கொங்கணியில் உள்ள கவிதை வாசிப்பான உத்தஜனாவின் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். [5] 2016 ஆம் ஆண்டில், கொங்கணி இசை நிகழ்ச்சியான வசந்த் பகார் - கொங்கணி கீதாஞ்சோ ஹாரில் இவர் நிகழ்த்தினார். [6] 2017 ஆம் ஆண்டில் , கோவாவின் சோகோரோவில் உள்ள கும்தாச்செம் என்ற விழாவில் இவர் நிகழ்ச்சி நடத்தினார். [7] மும்பையின் தாதரில் சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்த பன்மொழி கவிதை மாநாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தார். [8] இவர் சுவராசம்சராணி கிரிஜாதாய் கேல்கர் இசை விழாவை 2018 இல் தொகுத்து வழங்கினார். [9] இவர் 2019 ஆம் ஆண்டில் தி நவ்ஹிண்ட் டைம்ஸின் என்ற பத்திரிக்கையின் வெளியான தொடரான யுவர் கேரியர் மேட்டர்ஸின் ஒரு பகுதியாகவும் இருந்தார். [10]
குறிப்புகள்
தொகு- ↑ "Kishori Amonkar to live on in Goans' hearts". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). 5 April 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
Shakuntala Bharne, Vocalist and All India Radio announcer
- ↑ "Video has not killed this radio star". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). 12 February 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
... radio jockeys Leeta Dias, Usha Naik, Shakuntala Bharne...
- ↑ "Publications". Directorate of Official Language (in Goan Konkani). 19 September 2018. Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ "Swaranjali – an evening of music". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). 10 July 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ "Uttējana – Konkani Poetry Recitals" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ "An evening of Konkani songs". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). 19 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ "Celebrating seven festivals at Socorro". The Navhind Times (in அமெரிக்க ஆங்கிலம்). 16 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
... singers Shakuntala Bharne, Oluv and others added to the musical quotient.
- ↑ "साहित्य अकादमीतर्फे बहुभाषिक काव्यसंमेलन". Loksatta (in மராத்தி). Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
येत्या २६ एप्रिल रोजीही काव्यवाचनाचा कार्यक्रम आयोजित करण्यात आला असून यामध्ये हितेन आनंदपरा, शकुंतला भरणे, प्रशांत मोरे व दयालखी जशनानी हे कवी सहभागी होणार आहेत
- ↑ Walavalkar, Devendra (29 November 2018). "फोंड्यात १ व २डिसेंबर रोजी गिरीजाताई केळेकर संगीत महोत्सवाचे आयोजन". Goa Khabar (in மராத்தி). Archived from the original on 2019-03-29. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
कार्यक्रमाचे निवेदन दुर्गाकुमार नावती, सौ. दिपा मिरिंगकर, सौ. शकुंतला भरणे, धर्मानंद गोलतकर, नरेंद्र तारी, गिरीश वेळगेकर व चिन्मय घैसास हे करणार आहे.
- ↑ "On Air with Shakuntala, Ayesha, Uday and Alfie – The Navhind Times" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-14.