பிரபாகர் கரேக்கர்

பண்டிட் பிரபாகர் கரேக்கர் (Prabhakar Karekar) இவர் ஓர் இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் பண்டிட் சிதேந்திர அபிசேகி மற்றும் சி.ஆர்.வியாசின் சீடராவார். இவர், இந்தியாவின் கோவாவில் பிறந்தார். இவருக்கு 2014 இல் தான்சேன் சம்மான் மற்றும் 2016 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது ஆகியவை வழங்கப்பட்டது. [1] [2]

பின்னணி தொகு

பிரபாகர் ஜனார்தன் கரேக்கர் என்ற பெயரில் அப்போதைய போர்த்துகீசிய கோவாவில் 1944 இல் பிறந்தார். [3] இவரது இந்துஸ்தானி குரலிசை பயிற்சி சுரேஷ் ஹல்தங்கரிடமிருந்து வந்தது. இவர் ஒரு சிறந்த கலைஞராகவும் ஆசிரியராகவும் அறியப்படுகிறார். மேலும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞர் ஆவார்.

இந்துஸ்தானி குரலை ஊக்குவித்தல் தொகு

கரேக்கர், சுவரப்பிரபா என்ற அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவரும் ஆவார். [3] இவர் பல நம்பிக்கைக்குரிய மற்றும் திறமையான இளம் இசைக்கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். இவர் தனது கணக்கில் பல பதிவுகளை வைத்துள்ளார். மேலும், பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். விரிவுரை செய்தார் மற்றும் நடத்தினார் அல்லது மாநாடுகளில் பங்கேற்றார்.

இணைவு இசை தொகு

இவர் ஆர்னெட் கோல்மேன் (அமெரிக்கா), மற்றும் சுல்தான் கான் ( இந்தியா ) ஆகியோருடன் இணைவு இசை உலகில் நுழைந்தார். இந்துஸ்தானி குரலிசையில் இவர் செய்த பங்களிப்புக்காக சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. [3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Ramendra. "Pt. Prabhakar Karekar to be conferred Tansen Samman on December 12". Time of India. TOI. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
  2. "Akademi Awardee", Sangeet Natak Akademi, Sangeet Natak Akademi, archived from the original on 16 மார்ச் 2018, பார்க்கப்பட்ட நாள் 2 April 2018 {{citation}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 "CUR_TITLE". sangeetnatak.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-11-24. பார்க்கப்பட்ட நாள் 2018-11-24.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபாகர்_கரேக்கர்&oldid=3765868" இலிருந்து மீள்விக்கப்பட்டது