சக்கம்குளங்கரை சிவன் கோயில்
சக்கம்குளங்கரை சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருப்புனித்துராவில் உள்ள, சிவன் மற்றும் தேவி பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . [1] சக்கம்குளங்கரை கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் நவக்கிரகங்கள் உள்ள காரணத்தினால் அக்கோயில் புகழ்பெற்றதாகும். [2] இக்கோயிலின் சிவபெருமான் சுயம்புமூர்த்தியாக உள்ளார். ஆரம்பத்தில் தன்னுடைய உக்கிரம் காரணமாக அம்மூர்த்தி "மிருத்யுஞ்சய" வடிவில் இருந்ததாகக் கூறுவர். மேற்கு நோக்கியுள்ள இம்மூர்த்தி எட்டு கைகளுடன், பல்வேறு கூறுகளைக் கொண்டுள்ளது. [3] பண்டைய கேரளா மற்றும் கொச்சி இராச்சியத்தின் தலைநகரில் உள்ள பிராமணர் குடியிருப்புகளில் திருப்புனித்துரா ஒன்றாகும். இக்கோயிலானது கேரள-திராவிட கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டதாகும். இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலானதாகும். பரசுராமர், சிவபெருமானின் சிலையை நிறுவியதாக நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. [4] மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகக் கருதப்படுபவர் பரசுராமர் ஆவார். இந்தக் கோயில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற 108 சிவன் கோயில்களில் ஒன்று என்ற பெருமையுடையதாகும். இந்தக் கோயிலைப் பற்றிய பற்றிய குறிப்புகள் (ஆதம்பள்ளி ) 108 சிவாலய சோத்திரத்தில் காணப்படுகின்றன. [5]
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் திருப்புனித்துராவில் உள்ள பூர்ணத்ரயீச கோயிலின் வடக்கில் உள்ளது. கொச்சி இராச்சியத்தின் முக்கிய கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கருவறையில் சிவபெருமான் உள்ளார். அவருக்குப் பின்புறத்தில் பார்வதிதேவி உள்ளார். கோயிலின் கருவறை மேற்கு நோக்கி உள்ளது. கோயிலின் மேற்குப் பகுதியில் ஒரு பெரிய குளம் உள்ளது. சிவன் கோயிலை எதிர்கொள்ளும் வகையில் இக்குளம் கட்டப்பட்டது.
சிவராத்திரி விழா
தொகுஇக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் மலையாள மாதமான கும்பத்தில் (பிப்ரவரி - மார்ச்) 7 நாட்கள் சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. [6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "India / Kerala / Tripunithura / Chakkamkulangara Shiva Temple".
- ↑ "The keralatemples/chakkamkulangara_navagraha".
- ↑ "Chakkamkulangara, Ernakulam".
- ↑ "108 Shiva Temples in Kerala created by Lord Parasurama".
- ↑ "Adampalli - Chakkamkulangara Siva Temple".
- ↑ Sura Books (Pvt) Ltd (Oct 2006). South India (A Journey into Peninsular India). 1 (October 2006 ed.). 1620, J Block, 16th Main Road, Anna Nagar, Chennai, 600 040 India: Sura Books (Pvt) Ltd. p. 308. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-74781758.
{{cite book}}
: CS1 maint: location (link)