சக்களத்திக் குயில்

சக்களத்திக் குயில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குகுலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
காகோமேண்டிசு
இனம்:
கா. பெசாரினசு
இருசொற் பெயரீடு
காகோமேண்டிசு பெசாரினசு
வாகல், 1797

சாம்பல்-வயிற்றுக் குயில் (Grey-bellied cuckoo) அல்லது சக்களத்திக் குயில் (காகோமாண்டிசு பெசாரினசு) என்பது ஆசியா முழுவதும் பரவலாகக் காணப்படும் ஒரு குயில் சிற்றினம் ஆகும்.

பெயர்கள்

தொகு

தமிழில்  :சக்களத்திக் குயில்

ஆங்கிலப்பெயர்  :Indian Flaintive cuckoo

அறிவியல் பெயர் :Cacomantis passerinus [2]

உடலமைப்பு

தொகு

23 செ.மீ. - மெலிந்த இதன் உடல் கரும்சாம்பல் நிறமும் பழுப்புமாக இருக்க, தொண்டையும் மார்பும் சாம்பல் நிறமாகவும், வயிறு, வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். கருப்புவாலின் முனை வெள்ளை வாலின் ஓர இறகுகள் வெள்ளைப்பட்டைகள் கொண்டவை.

காணப்படும் பகுதிகள், உட்கொள்ளும் உணவு

தொகு

தனித்து உயர்மரக்கிளைகளில் கம்பளிப்பூச்சி முதலியவற்றை இரை தேடும். இதனை மரங்களடர்ந்த காட்டுப் பகுதிகளில் முன்னதைவிடப் பரவலாகக் காணலாம். குளிர் காலத்தில் மௌனமாக இருக்கும். இதன் இருப்பு விவரங்கள் சரியாக கணிக்கப்படாததாகவே உள்ளது. [3]

இனப்பெருக்கம்

தொகு

இனப்பெருக்கத்தில் பீபிப்பீ பீ எனவும் பீ பிப்பீ பிப்பீ என மெல்லத் தொடங்கி ஸ்ருதியைக் கூட்டியபடி தொடர்ந்து பாடும். நிலவு வெளிச்சம் இல்லாத இரவிலும் இதன் குரலைக்கேட்கலாம். தோற்றத்தில் குயில் கீச்சானை ஒத்ததால் பிரித்து அறிவது கடினம். தையல்சிட்டு, தேன்சிட்டு, கதிர்க்குருவி போன்ற சிறு பறவைகளின் கூட்டில் ஜீன் முதல் செப்டம்பர் முடிய முட்டை இட்டுச் செல்லும்.

படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Cacomantis passerinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22683920A93007678. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683920A93007678.en. https://www.iucnredlist.org/species/22683920/93007678. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Indian Flaintive cuckoo சக்களத்திக் குயில்". பார்க்கப்பட்ட நாள் 11 அக்டோபர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:72
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்களத்திக்_குயில்&oldid=3719726" இலிருந்து மீள்விக்கப்பட்டது