சக்கவரட்டி
சக்கவரட்டி, (Chakkavaratti) சக்க வரட்டியது, சக்க வரட்டி, பதனப்படுத்திய பலாப்பழம் அல்லது பலாப்பழம் அல்வா என்பது பலாப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவு.[1]இதனைத் தயாரிக்க பலாசுளையிலிருந்து விதைகள் மற்றும் விதையுறைகளை அகற்றி சிறிய துண்டுகளாக பலாப்பழ சுளையினை வெட்டவேண்டும். இந்தப் பலாப்பழத் துண்டுகளுடன் நெய் மற்றும் வெல்லம் சேர்த்து சமைக்கவேண்டும். சமைத்த பலாப்பழத் துண்டுகள் கூழாகவோ (paste) அல்லது பழப்பாகு போன்றோ (Jam) காணப்படும். சமைத்த இந்த உணவு, அறை வெப்பநிலைக்கு குளிர்ந்த பிறகு உண்ணலாம். இது ஆறு முதல் பத்து மாதங்கள் வரை கெடாதிருக்கும்.[2] மலையாளிகள் சக்கவரட்டியை பயன்படுத்தி அடா என்ற சிறப்பு உணவைத் தயார் செய்கிறார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Swami, Shrikant Baslingappa; Thakor, N. J.; Haldankar, P. M.; Kalse, S. B. (November 2012). "Jackfruit and Its Many Functional Components as Related to Human Health: A Review". Comprehensive Reviews in Food Science and Food Safety 11 (6): 565–576. doi:10.1111/j.1541-4337.2012.00210.x.
- ↑ Morton, Julia F. (1987). Fruits of warm climates. pp. 58–64.