சக்கையாட்டம்
சக்கையாட்டம் அல்லது சக்கை குச்சி ஆட்டம் என்பது ஒரு தமிழர் நாட்டுப்புறக் ஆடற்கலை ஆகும். நான்கு தேக்கு மரத்துண்டுகளை விரல்களுக்கிடையே வைத்துக்கொண்டு அடித்து ஒலி எழுப்பியபடி ஆடும் ஆட்டம் ஆகும்."[1] சக்கை என்ற மரத்துண்டுகளை, விரல்களுக்கிடையில் வைத்து ஒலி எழுப்பியபடி ஆடுவதால், இது சக்கையாட்டம் எனப் பெயர் பெற்றது.[2] இந்த ஆட்டம் பாண்டிச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாரியம்மன், முருகன் கோவில்களில் நிகழும் பெரிய விழாக்களிலும், சிறிய விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆட்டத்திற்குரிய இசைக்கருவிகள், குந்தளம், ஜால்ரா ஆகியனவாகும்.
ஆட்டமுறை
தொகுமேலும் இரண்டரை அடி நீளத்தில் மூங்கில் கம்புகளை இரண்டு கைகளிலும் வைத்து அடித்துக் கொண்டு ஆடுகின்றனர். ஆட்டமுறை இணைகோடான நிலையிலும் வட்ட நிலையிலும் ஆடப்படுகின்றது. இந்த ஆட்டத்தை கோயில் சார்ந்த நிகழ்வுகளில் ஆண்கள் மட்டுமே ஆடுகின்றனர். எட்டு அல்லது அதற்குமேல் கலைஞர்கள் பங்குபெறுவர். சக்கை குச்சியின் நீளம் 16 செ.மீட்டரும் அகலம் 2 செ.மீட்டர் அளவும் கொண்டதாய் இருக்கும். சக்கைகள் நான்கும் மெல்லிய நூலால் கோர்க்கப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ * சு. சக்திவேல். (2003). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-06-16.