மாரியம்மன்

தென்னிந்திய நாட்டுப்புற பெண் தெய்வம்
(மாரியம்மன் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாரியம்மன் (Mariamman) என்பவர் ஒரு தமிழ்நாட்டு நாட்டுப்புறப் பெண் தெய்வம் ஆவார். இவர் தென்னிந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில், பரவலாக வழிபடப்படுபவர். கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பகால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்தத் தெய்வம் மாரி(மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

மாரியம்மன்
மாரியம்மன்/மாரியாத்தாள் சிலை, ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்.
அதிபதிமழை தெய்வம்
வேறு பெயர்கள்மாரியம்மா, மாரியம்மன், மாரியாத்தா, மாரி
இடம்புவி
ஆயுதம்திரிசூலம், வாள்

தொன்மக் கதை

தொகு

மாரியம்மன் குறித்த கதையில் தொன்மக் கதைகளும், நாட்டுப்புற நம்பிக்கைகளும் கலந்துள்ளன. அது பின்வறுமாறு ரைவத ராஜன் என்ற மன்னனின் மகள் ரேணுகாம்பாள். அவளுக்கும் ஜமதக்கினி முனிவருக்கும் மணமாகிறது. இந்த இணையருக்கு பரசுராமன் என்ற மகன் பிறக்கிறான். ரேணுகா தன் கற்பின் ஆற்றலால் அபாரமான சக்தியைக் கொண்டிருக்கிறாள். அவள் வெறுங்கையோடு 'பத்ம சரஸ்' என்ற சுனைக்குப் போய்த் தனது சக்தியால் தண்ணீரையே ஒரு குடமாகச் செய்து அதில் தனது கணவரின் சடங்குகளுக்கு வேண்டிய நீரைக் கொண்டுவருவாள்.

ஒரு நாள் அவள் அச்சுனைக்கு வழக்கப்படி தண்ணீரைக் கொண்டுவரச் சென்ற பொழுது அங்கு வானில் சென்ற அழகுவாய்ந்த கந்தர்வன் ஒருவனைக் காண்கிறாள். இதனால் அவளது கற்பினால் பெற்ற ஆற்றலை இழக்கிறாள். இதனால் முன்போல் நீரைக் கொண்டு குடம் செய்ய அவளால் முடியாமல் போகிறது. இதை அறிந்த ஜமதக்கினி கோபமூண்டு மகன் பரசுராமனை அழைத்து அவனது தாயின் தலையைது துண்டிக்குமாறு கட்டளை இடுகிறார். பரசுராமரும் தன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுகிறார். இதனால் திருப்தியடைந்த ஜமதக்கியும் பரசுராமனைப்பார்த்து ஏதாவது வரம் வேண்டுமா என கேட்கிறார். அவர் தன் தாயார் உயிர் பெற வேண்டுமெனக் கேட்கிறார். ஜமதக்கியும் அவளை உயிர்பிக்க தனது அற்புத சக்திகொண்ட தீர்த்தத்தை பரசுராமனிடம் கொடுத்து அவளை உயிர்ப்பிக்குமாறு சொல்கிறார். பரசுராமர் தான் தனது தாயாரைக் கொல்லப் போன பொழுது அதைத் தடுத்த ஒரு பறையர் பெண்ணையும் தலை துண்டித்துக் கொன்று, தன் தாயாரையும் தலை துண்டித்துக் கொன்றிருந்தார்.[1] தந்தை அளித்த வரத்தினால் மகிழ்ந்த பரசுராமரர் அங்குகிடந்த முண்டங்களையும் தலைகளையும் ஒன்று சேர்த்த போது தவறாகத் தனது தாயாரின் தலையைச் பறையர் பெண்ணின் உடலுடனும் பறையப் பெண்ணின் தலையைத் தனது தாயாரின் உடலுடனும் சேர்த்துவிட்டார். உயிர்பெற்ற இரண்டு பெண்களுள் யாரைத் தனது தயாராகக் கருதுவதெனத் தெரியாது தயங்கிய பரசுராமரைப் பார்த்து ஜமதக்கியும் மனித உடலிலேயே முக்கியமானது தலையேயாகையால் எந்த பெண்ணின் உடலில் தனது மனைவியின் தலையிருந்ததோ அவளையே அவன் தனது தாயாராகக் கொள்ள வேண்டு மெனக் கூறினார். மற்றொரு பெண்ணுக்கு மாரியம்மன் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் ரேணுகாம்பாளுக்கு பணியாளராக நியமிக்கப்பட்டார்.[1]

புகழ்பெற்ற தலங்கள்

தொகு

இந்தியா

தொகு

தமிழகம்

தொகு

இலங்கை

தொகு

மற்ற நாடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 பி. வி. ஜகதீச ஐயர், ஜில்லா சரித்திரம் வட ஆற்காடு, பதிப்பு 1926, பக்கம்; 59-63
  2. "வரலாறு". keezhatherumariamman (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரியம்மன்&oldid=4052224" இலிருந்து மீள்விக்கப்பட்டது