பாங்காக் மாரியம்மன் கோயில்

தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப் பெற்றதாகும். உள்ளூர்வாசிகள் இதை வட் கீட் என்று அழைக்கின்றனர். இங்கு குடியேறிய தமிழர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இக்கோவிலைக் கட்டினார்கள். இக்கோவில் தமிழ்க் கடவுளான மாரியம்மனைச் சிறப்பு தெய்வமாகக் கொண்டு கட்டப் பெற்றது. பாங்காக்கில் உள்ள புத்த சமயம் சாராத வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் பிற இந்து தெய்வங்களின் சிலைகளும் உள்ளன. உள்ளூர்வாழ் தமிழர்களும், தாய்லாந்து மக்களும் விழாக்காலங்களின்போது வழிபட வருகிறார்கள். நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பாங்காக் மாரியம்மன் கோயில்