பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்

பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வவுனியாவிலிருந்து 0.5 கி.மீ (0.31 மீ) தொலைவில் அமைந்துள்ளது. கிபி 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட நான்கு கோயில்களில் இதுவே முதன்மையானது. இந்த கோயில் மக்களால் கட்டப்பட்டது மற்றும் ஆரம்ப நாட்களில் இந்த கோவிலின் வழிபாடு புசாரிகளால் செய்யப்பட்டது, பிராமணர்கள் 1970 களில் இருந்து பூஜை செய்து வருகின்றனர். அந்தக் கோயில் அன்றிலிருந்து மிகவும் பிரபலமானது. இந்த தெய்வம் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயில் வவுனியாவின் மிகப்பெரிய அம்மன் கோயிலாகும். வவுனியாவின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் மகோற்சவத்தின் போது வருவார்கள். வவுனியாவில் மிக நீண்ட நாள் நடைபெறும் மகோற்சவம் இக்கோயிலுக்குரிய சிறப்பம்சமாகும். இவ்வம்மனை வழிபட்டால் கண் பார்வை சரியாகும், நினைத்தது கிட்டும், அம்மை நோய் விலகும்.

பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில்
ஆள்கூறுகள்:8°45′30″N 80°29′04″E / 8.7584451°N 80.4843458°E / 8.7584451; 80.4843458
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகணம்
மாவட்டம்:வவுனியா
அமைவு:பண்டாரிகுளம்
கோயில் தகவல்கள்
தாயார்:முத்துமாரியம்மன்
தீர்த்தம்:அமிர்தவர்ஷினி
சிறப்பு திருவிழாக்கள்:மகோற்சவம்
நவராத்திரி
ஆடிப் பூரம்
உற்சவர்:விநாயகர்
முத்துமாரியம்மன்
முருகன்
சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட பாணி
நிறுவிய நாள்:கிபி 16ம் நூற்றாண்டு

அமைவிடம்தொகு

வவுனியாவின் வைரவர்புளியங்குளம் கிராமமும் பண்டாரிகுளம் கிராமமும் சங்கமிக்கும் எல்லையில் அன்னையின் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. வயல்வெளிகளை நோக்கியவாறு இக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இக்கோவிலை சுற்றிவர மக்களின் குடியிருப்பு அமையப்பெற்றதால் எப்பொழுதும் இப்பகுதி மக்கள் நடமாட்டம் உள்ளபகுதியாகும். இக்கிராமதிற்கு பேருந்து வசதி இல்லை என்றாலும் நகருக்கு மிக அண்மையில் உள்ளதால் முச்சக்கரவண்டியூடக இக்கோவிலுக்கு வருகை தரலாம்.

 
கோவிலுக்கு முன்னால் உள்ள வயல்வெளி

வரலாறுதொகு

இகோவிலானது அங்கு வாழந்த சைவ சமய மக்களால் மழை பொய்க்காமல் இருக்கவும், நோய் ஏற்படாமல் இருக்கவும் வேண்டி கட்டப்பட்டது, பின்னர் இக்கோவில் திசை கோவிலாக மாறியது. மக்களால் கட்டப்பட்ட கோவிலாக இருந்ததால் ஆரம்ப காலங்களில் பூசாரிமாரால் சடங்கு மேற்க்கொள்ளப்பட்டது பின்னர் ஆகம விதிக்கமைய 1970களின் பின்னர் பிராமணர்களால் பூஜை மேற்க்கொள்ளபடுகிறது. இதன்காரணமாக ஆரம்ப காலங்களில் ஒரு சிறு கொட்டிலில் காணப்பட்ட ஆலயம் பின்னர் பெரிய கோவிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 2010ல் மீள கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது, இதன் மூலம் வவுனியா நகரில் உள்ள மிகப்பெரிய அம்மன் கோவிலாக மாற்றம் பெற்றது. தற்போது கோவிலில் இராஜகோகோபுரம் கட்டும் பணிகள் இடம்பெறுகின்றது.[1]

 
2010க்கு முதல் ஆலயத்தின் தோற்றம்

அமைப்புதொகு

இலக்கம் விபரம்
1 இராஜ கோபுரம்
2 மணி மண்டபம்
3 மூலவர் கருவறை
4 லிங்க மூர்த்தி
5 சிம்மம்
6 பலிபீடம்
7 கொடித்தம்பம்
8 நூதன கணபதி
9 நிருவாக சபை
10 அர்த்த மண்டபம்
11 விநாயகர்
12 பின் மூர்த்தி
13 கோபாலகிருஷ்ணர்
14 வள்ளி தெய்வானை சமேத முருகன்
15 வேப்ப மரம்
16 நவக்கிரகம்
17 வசந்த மண்டபம்
18 நாகதம்பிரான், வைரவர்
19 காத்தவராயன், பேச்சி, ஹனுமார்
20 தாரிகா சண்டேஸ்வரி
21 தீர்த்தத் தடாகம்
22 அன்னதான மடம்
23 தேர் முட்டி

திருவிழாக்கள்தொகு

இவ்வாலய மகோற்சவம் ஆனது ஆடி அமாவாசையில் கோடி ஏற்றத்துடன் ஆரம்பித்து அடுத்து வரும் 15 நாட்கள் தொடர்ந்து திருவிழா இடம்பெறும். இத்திருவிழா தான் வவுனியா நகரில் அதிக நாள் இடம்பெறும் திருவிழா ஆகும். திருவிழா காண வவுனியாவின் பலபாகங்களில் இருந்தும் அடியார்கள் வருகை தருவார்கள். மேலும் இவ்வாலயத்தில் நவராத்திரி 10 நாள் திருவிழா போல் இடம்பெறும். சப்பரோற்சவம், இரதோற்சவம் ஆகிய நாள்களில் பல அடியார்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்துவர். பூங்காவன உற்சவத்தின் போது பல்வேறுபட்ட கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறும். சகோதர இனமக்களும் அந்நேரத்தில் வருகை தருவர்.

 
தேர் திருவிழாவில்

மேற்க்கோள்கள்தொகு

  1. "Amman Kovil Road Pandarikulam" (en).