சக்ரி (இசையமைப்பாளர்)

பாடகர் , இசையமைப்பாளர்

கில்லா சக்ரதார் (Gilla Chakradhar) (15 ஜூன் 1974 - 15 டிசம்பர் 2014), தொழில் ரீதியாக சக்ரி என்று அழைக்கப்படும் இவர் தெலுங்குத் திரைப்படத் துறையில் பணியாற்றிய இந்திய இசையமைப்பாளரும் மற்றும் பாடகரும் ஆவார். சத்யம் (2003) படத்திற்காக தெலுங்கு - சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதையும் (2010) சிம்ஹா படத்திற்காக சிறந்த இசை அமைப்பாளருக்கான நந்தி விருதையும் வென்றார்.

சக்ரி
2014இல் சக்ரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கில்லா சக்ரதார்
பிறப்பு(1974-06-15)15 சூன் 1974
கம்பளப்பள்ளி, மகபூபாபாத் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா
இறப்பு15 திசம்பர் 2014(2014-12-15) (அகவை 40)
ஐதராபாத்து , தெலங்காணா, இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்2000–2014

சொந்த வாழ்க்கை. தொகு

கில்லா சக்ரதார், ​​தெலங்காணா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் கம்பாலபள்ளியில் ஜூன் 15, 1974 இல் பிறந்தார்.[1]

தொழில் வாழ்க்கை தொகு

சக்ரி , சுமார் 85 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பூரி ஜெகந்நாத் இயக்கிய பச்சி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளில் <i id="mwIg">சத்யம்</i> படத்திற்காக சிறந்த பாடகர் விருதையும், <i id="mwJg">சிம்ஹா</i> படத்திற்காக நந்தி விருதையும் வென்றார். ரவி தேஜா மற்றும் இயக்குனர் பூரி ஜெகந்நாத் ஆகியோருக்காக பல இசை வெற்றிகளை உருவாக்கினார். முந்தையவர்களுடன் ஒன்பது படங்களிலும், பிந்தையவர்களுடன் பத்து படங்களிலும் பணியாற்றினார்.[2]

சொந்த வாழ்க்கை தொகு

சக்ரி தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த சிறிது காலத்திலேயே 2004 இல் சிரவானி என்பவரை மணந்தார்.[3] இவருக்கு ஒரு சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர். .

இறப்பு தொகு

உடற் பருமன் தொடர்பான கூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த[4] சக்ரி 2014 டிசம்பர் 15 அன்று தனது தூக்கத்திலேயே இறந்தார்.[5]

சர்ச்சைகள் தொகு

2013 ஆம் ஆண்டில், ஒரு விருந்தில் 36 வயது பெண்ணுடன் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி சக்ரி மற்றும் தயாரிப்பாளர் பருச்சூரி பிரசாத் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது."[6]

மேற்கோள்கள் தொகு

  1. "మళ్లీ కూయవా గువ్వ.. | Telangana Magazine". Telangana Magazine. Archived from the original on 7 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  2. "ప్రముఖ సంగీత దర్శకులు చక్రి ఇక లేరు". Janam Sakshi - Telugu Daily News Portal (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-12-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  3. "Relatives fight over Chakri's property". The Times of India. 11 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  4. "Music director Chakri dies of heart attack" (in en-IN). 2014-12-15. https://www.thehindu.com/entertainment/Music-director-Chakri-dies-of-heart-attack/article60094303.ece. 
  5. "Veteran Music Director No More". Archived from the original on 20 February 2015. பார்க்கப்பட்ட நாள் 15 December 2014.
  6. "Telugu music composer Chakri and producer Paruchuri Prasad booked for molestation". DNA India (in ஆங்கிலம்). 2013-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரி_(இசையமைப்பாளர்)&oldid=3933697" இலிருந்து மீள்விக்கப்பட்டது