சங்ககிரி கருஞ்சதை கோழி
சங்ககிரி கருஞ்சதை கோழி என்பது தமிழ்நாட்டினை பூர்விகமாகக் கொண்ட கோழி வகையாகும். இந்தக் கோழியானது கருஞ்சதை நாட்டுக் கோழி என்றும், சங்ககிரி சண்டைக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோழியானது கத்திக்கட்டு என்ற ரகத்தினைச் சேர்ந்ததாகும். அதனால் கத்திக் கால் சண்டைக்காக பயன்படுத்தப்படுகின்றன.
தோற்றம்
தொகுதமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி என்ற ஊரினை பூர்விகமாகக் கொண்டது. இந்த வகையான கோழிகள் கருங்கண், கருங்கால், கருந்தோல் போன்றவைகளைக் கொண்டது.
சங்ககிரி கருஞ்சதை சேவல் மத்துக் கொண்டை, கத்திக் கொண்டை போன்ற கொண்டைகளைக் கொண்டிருக்கலாம். பொதுவாக சேவல்கள் 3 முதல் 5 கிலோ எடை வரையும், கோழிகள் 2 முதல் 3 கிலோ வரையும் எடையைக் கொண்டிருக்கும். இந்தக் கோழிகளின் முட்டை மற்ற நாட்டுக் கோழிகளைப் போன்று வெள்ளை மற்றும் பழுப்பு நிறத்தினைக் கொண்டவையாக உள்ளன.
நாட்டு மருத்துவம்
தொகுகருங்கோழியானது மருத்துவக் குணம் கொண்டதாக நம்பப்படுகிறது.இவை குட்டம், காணாக்கடி, சிரங்கு, விரணங்கள், வாத நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும், ஆண்மை பலத்திற்கான மருந்தாகவும் நம்பப்படுகிறது. [1]
இந்து சமயத்தில்
தொகுநாட்டார் தெய்வங்களை வழிபடும் போது முப்பலி பூசை என்ற சடங்கு நடத்தப்படுகிறது. இதில் கருங்கோழி, கருப்பாடு, கரும்பன்றி பலியிடும் வழக்கம் இருந்துள்ளது. [2]
காட்சியகம்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ டாக்டர்.வி.விக்ரம்குமார். "மரபு மருத்துவம்: மருந்தாகும் நாட்டுக் கோழி... நோய் தரும் பிராய்லர் கோழி". இந்து தமிழ் திசை.
- ↑ "வரலாற்றின் அடையாளமாக கற்கோவில்!". தினமலர்.