சங்கத் கோட்டை

சங்கத் கோட்டை (தங்க கோட்டை)(Songadh Fort) என்பது இந்தியாவில் குசராத்து தபி மாவட்டத்தின் சங்கத் நகரில் உள்ள 16ஆம் நூற்றாண்டின் கோட்டையாகும்.[1] குசராத்தி மொழியில் 'சன்' (தங்கம்) மற்றும் 'காட்' (கோட்டை) என்ற சொற்களிலிருந்து இந்தக் கோட்டைக்கு இதன் பெயர் கிடைத்தது. இது கடல் மட்டத்திலிருந்து 112 மீட்டர் உயரத்தில் தபி ஆற்றின் உகாய் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.[1]

Songadh Fort
சங்கத் கோட்டை
பகுதி: குசராத்து
சங்கத், குசராத்து, இந்தியா
சங்கத் கோட்டை
வகை கோட்டை
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது குசராத்து அரசு
இட வரலாறு
கட்டிய காலம் 1729-1766
கட்டியவர் மராத்தியப் பேரரசு
கட்டிடப்
பொருள்
கிரானைட், பாறை, சுண்ணாம்புக்கல்

வரலாறு

தொகு
 
சங்கத் கோட்டை வரலாறு

சங்கத் கோட்டை 1721 மற்றும் 1766க்கு இடையில் பிள்ளாஜி ராவ் கெய்க்வாட் என்பவரால் கட்டப்பட்டது.[2] எதிரிகளைக் கண்காணிக்க ஒரு வசதியான இடமாக இது உயரமான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது.[1]

கட்டிடக்கலை

தொகு

முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் ஆகிய இருவரின் செல்வாக்கின் சான்றுகள் இந்தக் கோட்டையின் கட்டிடக்கலையில் காணப்படுகின்றன.[1]

போக்குவரத்து

தொகு

தேசிய நெடுஞ்சாலை-6இல் உள்ள சங்கத் நகரத்தை அணுகுவதன் மூலம் இதை அடையலாம்.[1]

சுற்றுலா ஈர்ப்பு

தொகு

இந்தக் கோட்டை சங்கத் உள்ளூர் ஆணையம் மற்றும் மாவட்ட அதிகாரிகளால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.[1] சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் ஒரு பகுதியாக ஒரு ஏரி உருவாக்கப்பட்டு அணை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Songadh Fort to become a tourist destination - Times of India".
  2. "Songadh History by Ehowportal".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கத்_கோட்டை&oldid=4128238" இலிருந்து மீள்விக்கப்பட்டது