சங்கமா (மனித உரிமைகள் குழு)

நங்கை, நம்பி, ஈரர், திருனர் போன்ற பாலின இயல்புகளைக் கொண்ட இந்திய மக்களின் உரிமைகளுக்கான குழு

சங்கமா என்பது இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு நங்கை, நம்பி, ஈரர், திருனர் பாலின இயல்புகளைக் கொண்ட இந்திய மக்களின் உரிமைகளுக்கான  குழுமமாகும் . சங்கமா 1999 இல் தொடங்கியபோது, இந்த பாலின ஈர்ப்பை கொண்டவர்களைப் பற்றிய ஒரு ஆவண மையமாக செயல்பட்டது. தற்போது அது நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகள் அரசு சார்பற்ற அமைப்பு [1] ஆக வளர்ந்துள்ளது. இது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக பொது மக்களிடம் பரப்புரை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்  மற்றும் எச்.ஐ.வி தடுப்பு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இந்த அமைப்பு கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் மற்றும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

வரலாறு

தொகு

1999 ஆம் ஆண்டு, பாலியல் சிறுபான்மையினருக்கு ஆலோசனை சேவைகள் மற்றும் பெங்களூர் பிராந்தியத்தில் உள்ள நங்கை, நம்பி, ஈரர், திருனர் சிக்கல்கள் பற்றிய அறிஞர்களுக்கு ஆராய்ச்சி பொருட்களை வழங்கும் மையமாக சங்கமா மனோகர் இளவர்த்தியால் நிறுவப்பட்டது. [2] இந்த அமைப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆங்கிலம் பேசும் நங்கை, நம்பி, ஈரர், திருனர் நபர்களை ஈர்க்கும் விவாதங்களை நடத்தியது. பல ஆண்டுகளாக, இந்த அமைப்பு ஆலோசனை சேவைகளை வழங்குவது, எச்ஐவி/எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு  தகவல்களை வழங்குவது, பேரணிகள் மற்றும் அணிதிரட்டல் மூலம் திருநங்கைகளின் உரிமைகளை ஆதரிப்பது மற்றும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் ஆபத்தில் உள்ள கர்நாடகாவில் உள்ள நங்கை, நம்பி, ஈரர், திருனர் நபர்களுக்கு பாதுகாப்பான தங்குமிடமாக செயல்படுவது என அதன் நோக்கத்தை விரிவுபடுத்தியது. எச்.ஐ.வி மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆபத்தில் உள்ள இந்தியாவில் உள்ள பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஆங்கிலம் அல்லாத மொழி பேசும் கோத்திகள் மற்றும் ஹிஜ்ராக்கள் மீது தனி கவனம் செலுத்த இவ்வமைப்பின் மனித உரிமைகள் அணி தன் கவனத்தை அதிகரித்துள்ளது.

மனித உரிமை செயல்பாடுகள்

தொகு

சமூக குழுக்களுடன் தொடர்பு

தொகு

கேரளாவின் கோட்டயத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு செயல்படும் லாஸ்யகைரலி பெஹ்சான் [3] என்ற அறக்கட்டளையின் செயல்பாடுகளான பாலியல் சிறுபான்மையினர் மற்றும் பாலியல் தொழிலாளர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியுடன் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காக செயல்படுதல் போன்றவற்றில் அவர்களோடு இணைந்து பாலியல் தொழிலாளர்களின் அவசியமான  சுகாதார விழிப்புணர்வு, எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு, பாலியல் தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் நுண்நிதி மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் அவர்களின் நடத்தை மாற்றம் போன்ற சமூக அடிப்படையிலான திட்டங்களுக்கான உத்திகளை வழங்குகிறது. அதே உதவிகளை பெங்களூர் நகர்ப்புற மாவட்டத்தில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு திட்டங்களை செயல்படுத்தும் சமூக அடிப்படையிலான அமைப்பான சமரா சங்கத்திற்கும் வழங்கி துணை செய்கிறது. [4]

விரிவாக்க செயல்பாடுகள்

தொகு

பாலியல் சிறுபான்மையினரான ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும்  திருநங்கைகள் போன்றோரை சந்தித்து விழிப்புணர்வு கொடுப்பதற்கான இரண்டு திட்டங்களை  சங்கமா நிறுவியது. அதன்மூலம் பெங்களூரு தெருக்களில் தனிநபர்கள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகளைக் கேட்க களப்பணியாளர்கள் அவர்கள் தங்கள் தொழிலை நடத்தும் கூடுகை இடங்களுக்கே நேரடியாக சென்று சந்தித்து விளக்குகின்றனர். இந்த நேரடி சந்திப்பு திட்டங்கள் அந்த சிறுபான்மையினர் வெளியே வரவும் அவர்களுக்கான உரிமைகளை அறிந்துகொள்ளவும் பெரிதும் உதவியது. [5]

கர்நாடகா பாலியல் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் பாதசாரி திரைப்படங்களுடன் இணைந்து, 2012 இல், பட்டாம்பூச்சிகள் பறக்கட்டும் என்ற முழு நீளத் திரைப்படத்தை சங்கமா வெளியிட்டது. இந்தப் படம் பெங்களூர் திரைப்பட விழாவில் நிராகரிக்கப்பட்டது ஆனால் காஷிஷ் மும்பை விழாவில் விருது பெற்றது. [6]

பாலியல் சிறுபான்மையினருக்கு சட்ட சேவைகள்

தொகு

தங்கள் பாலியல் விருப்பம் காரணமாக பொய் குற்றம் சாட்டப்படும் பாலியல் சிறுபான்மையினருக்கு காவல் துறையைச் சேர்ந்தவர்களால் இழைக்கப்படும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக வழக்குகளை பதிய சங்கமா சட்ட உதவி வழங்குகிறது. [7] சட்ட சேவைகள் தவிர, கர்நாடகாவில் எல்ஜிபிடி நபர்களை போலீஸ் துன்புறுத்தல் மற்றும் காவலில் வைப்பதையும் குழு கண்காணிக்கிறது. 2008 ஆம் ஆண்டு, கைது செய்யப்பட்ட 5 ஹிஜ்ராக்களுக்கு ஆதரவாக பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது, சங்கமப் பிரதிநிதிகள் மற்றொரு நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர், அங்கு அவர்கள் தாக்கப்பட்டனர். [8] கேரள, கர்நாடக மாநில நீதிமன்றங்களில் பாலியல் சிறுபான்மையினர்களின் சார்பாக பல்வேறு பொதுநல வழக்குகளை  பதிந்து அவர்களின் உரிமைகளை பெற்றுத்தந்ததில் சங்கமா இந்திய அளவில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. மேலும் இந்தியாவில் திருநங்கைகளுக்கான பாலியல் பாகுபாடு மற்றும் உரிமைகள் குறித்து இந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Senthalir (July 18, 2011). "Fights to create safer space for sexual minorities". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/bengaluru/Fights-to-create-safer-space-for-sexual-minorities/articleshow/9263215.cms. 
  2. Sen, Indrani (2005). Transgender human rights. Delhi: Isha Books. pp. 205–209.
  3. . http://www.doaram.com/organization/lasyakaira-li. 
  4. "Samara to handle projects of HIV prevention programme". The Hindu (Bangalore). March 5, 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/samara-to-handle-projects-of-hiv-prevention-programme/article324115.ece. 
  5. Sen, Indrani (2005). Transgender human rights. Delhi: Isha Books. pp. 205–209.Sen, Indrani (2005). Transgender human rights. Delhi: Isha Books. pp. 205–209.
  6. "Sangama releases award winning documentary". The Hindu (Bangalore). June 19, 2012. http://www.thehindu.com/news/cities/bangalore/sangama-releases-award-winning-documentary/article3537035.ece. 
  7. Sen (2005). Transgender human rights.Sen, Indrani (2005). Transgender human rights. Delhi: Isha Books. pp. 205–209.
  8. Wockner, R. (2008, Nov 06). Trans people and LGBT activists arrested in India. Between the Lines