சங்கமேஸ்வர் தாலுகா
சங்கமேஸ்வர் தாலுகா (Sangameshwar taluka), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில், அரபுக் கடலை ஒட்டி அமைந்த இரத்தினகிரி மாவட்டத்தின் 9 தாலுகாக்களில் ஒன்றாகும். [1]இதன் நிர்வாகத் தலைமையிடம் தேவ்ருக் ஆகும். ஆகும். 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இத்தாலுகா 1 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும் மற்றும் 197 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [2]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சதுர கிலோ மீட்டர் இத்தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,98,343 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 92,791 மற்றும் பெண்கள் 105,552 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,138 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 17832 - 9% ஆகும். சராசரி எழுத்தறிவு 79.26% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 9,712 மற்றும் 407 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.06%, இசுலாமியர்கள் 6.04%, பௌத்தர்கள் 9.09%, சமணர்கள் 0.52% மற்றும் பிறர் 0.20% ஆக உள்ளனர். [3]