இரத்தினகிரி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

இரத்தினகிரி மாவட்டம் (மராத்தி: रत्नागिरी जिल्हा) மேற்கு இந்திய மாநிலமான மகாராட்டிரத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இரத்தினகிரி இந்த மாவட்டத்தின் தலைநகரமாகும். மாவட்டத்தில் 11.33% நகரியப் பகுதிகளாகும்.[1] மேற்கே அரபிக்கடலும் தெற்கே சிந்துதுர்க் மாவட்டமும் வடக்கே ராய்கட் மாவட்டமும் கிழக்கே சாங்க்லி, கோலாப்பூர், சதாரா மாவட்டங்களும் எல்லைகளாக உள்ளன. இது கொங்கண் மண்டலத்தின் பகுதியாக உள்ளது. இங்கு இரத்தினகிரி கோட்டை உள்ளது.

இரத்தினகிரி மாவட்டம்
रत्नागिरी जिल्हा
மகாராட்டிரம் மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டம் அமைவிடம்
மாநிலம்மகாராட்டிரம்,  இந்தியா
Administrative divisionகொங்கண் மண்டலம்
தலைநகரம்ரத்னகிரி
பரப்பளவு8,208 km2 (3,169 sq mi)
மக்கள்தொகை16,96,777 (2001)
மக்கள்தொகை அடர்த்தி206.72/ச.கி.மீ (535.4/ச.மீ)
படிப்பறிவு65.13%
கோட்டம்1. மண்டன்காட், 2. தபோலி, 3. கேத், 4. சிப்லுன், 5. குகாகர், 6. சங்கமேசுவர், 7. ரத்னகிரி, 8. லாஞ்சா, 9. ராசாப்பூர்
மக்களவைத் தொகுதி1. ரத்னகிரி-சிந்துதுர்க் (மக்களவைத் தொகுதி) (சிந்துதுர்க் மாவட்டத்துடன் பகிர்ந்து), 2. ராய்கட் மக்களவைத் தொகுதி (ராய்கட் மாவட்டத்துடன் பகிர்ந்து) (ஆதாரம்: தேர்தல் ஆணைய இணையதளம்)
சட்டப் பேரவைத் தொகுதிகள்5
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 204
அலுவல் இணையதளம்

மக்கள்தொகை ஆய்வு

தொகு

இந்த மாவட்ட மக்கள் கொங்கணி மொழி|கொங்கணி, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுகின்றனர். பெரும்பாலோனோரின் தாய்மொழியாக கொங்கணி உள்ளது.

பாரத ரத்னா விருது பெற்ற மூவர் இந்த மாவட்டத்திலிருந்து வந்துள்ளனர்:

  1. முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962) - 1958ஆம் ஆண்டு
  2. முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972) - 1963ஆம் ஆண்டு
  3. முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956) - 1990ஆம் ஆண்டு

மேற்கோள்கள்

தொகு
  1. "Census GIS India". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2011-03-14.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினகிரி_மாவட்டம்&oldid=3600748" இலிருந்து மீள்விக்கப்பட்டது