இரத்னகிரி கோட்டை, மகாராட்டிரம்
இரத்னகிரி கோட்டை (Ratnagiri Fort) இரத்னதுர்க் கோட்டை' அல்லது 'பகவதி கோட்டை' என்றும் அழைக்கப்படும் இது மகாராட்டிராவின் இரத்தினகி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோட்டையாகும். இந்த கோட்டையின் உள்ளே பகவதி கோயில் இருப்பதால் இது முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது.
இரத்னகிரி கோட்டை | |
---|---|
பகுதி: கொங்கண் கடற்கரை | |
இரத்தினகிரி மாவட்டம், மகாராட்டிரம் | |
![]() | |
இரத்னகிரி கோட்டையின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள் | 16°59′46.3″N 73°16′13″E / 16.996194°N 73.27028°E |
வகை | கடற்கரைக் கோட்டை |
இடத் தகவல் | |
உரிமையாளர் | இந்திய அரசு |
மக்கள் அநுமதி |
அனுமதியுண்டு |
நிலைமை | இடிந்த நிலை |
இட வரலாறு | |
கட்டிடப் பொருள் |
செம்புரைக்கல் |
உயரம் | 200 அடி. |
வரலாறுதொகு
இந்த கோட்டை பாமினி காலத்தில் கட்டப்பட்டது. 1670-இல் மராட்டிய மன்னர் சிவாஜி பிஜப்பூரின் சுல்தானிடமிருந்து கோட்டையை வென்றார். [1] மன்னர் சிவாஜி இரண்டு பாதுகாப்புக் கோபுரங்களைக் கட்டினார். ஒன்று தெற்கிலும் மற்றொன்று பழைய நீதிமன்ற வளாகத்திற்கு அருகிலும் உள்ளது. 1750-1755 இல் மராட்டிய தளபதி கனோஜி ஆங்கரே என்பவரால் கோட்டையின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டது. பேஷ்வா ஆட்சியின் போது (1755-1818) தோண்டு பாஸ்கர் பிரதிநிதி கோட்டையில் சில சிறிய பழுதுகளை சரி செய்தார். [2] பின்னர் 1818 இல் ஆங்கிலேயர்களால் கோட்டை கைப்பற்றப்பட்டது. [3] கோவில் 1950 இல் புதுப்பிக்கப்பட்டது.
அணுகல்தொகு
இரத்தினகிரி நகரத்திலிருந்து நடந்து செல்லக்கூடிய தூரத்தில் கோட்டை உள்ளது. கோட்டையின் நுழைவு வாயிலுக்கு ஒரு அகலமான சாலை செல்கிறது. கோட்டையைச் சுற்றி வர ஒரு மணி நேரம் ஆகும்.
பார்க்க வேண்டிய இடங்கள்தொகு
கலங்கரை விளக்கம் கோட்டையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது. கோட்டையின் உள்ளே பகவதி கோவில், குளம் மற்றும் கிணறு உள்ளது. கோட்டைக்கு கீழே ஒரு குகை உள்ளது. ரெடே புருஜ் அனைத்து கோட்டைகளிலும் வலுவானது ஆகும்.
இதனையும் பார்க்கவும்தொகு
- இந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல்
- கனோஜி ஆங்கரே
- மராத்தியர்
- மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
- முகலாய-மராத்தியப் போர்கள்
- இந்திய படைத்துறையின் வரலாறு
ஆள்கூறுகள்: 16°59′46.3″N 73°16′13″E / 16.996194°N 73.27028°E
குறிப்புகள்தொகு
- ↑ "Ratnadurg, Sahyadri,Shivaji,Trekking,Marathi,Maharastra". Trekshitiz.com. 5 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Pathak. Maharashtra State Gazetteers- Ratnagiri District. Government of Maharashtra.
- ↑ Trekshitiz. "Tringalwadi". www.trekshitiz.com. Trekshitiz. 13 டிசம்பர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 13 December 2019 அன்று பார்க்கப்பட்டது.