சங்கரசோழன் உலா
சங்கரசோழன் உலா செந்தமிழ் என்னும் மாத இதழில் 16ஆம் தொகுதியில் வெளிவந்தது. இந்த நூல் மூவருலா பாடிய ஒட்டக்கூத்தரின் உலாக்களில் ஒன்றாகிய விக்கிரம சோழன் உலாவில் கூறப்பட்டுள்ள சோழர் பரம்பரை வரிசையை அப்படியே காட்டிக்கொண்டு தொடர்கிறது. நூல் தோன்றிய காலம் 13 ஆம் நூற்றாண்டு.
சங்கரன் தந்தை சங்கமன். இவனுக்கு மூன்று பிள்ளைகள். முதல் மகன் நல்லமன். இவனை எதிரிலி பெருமாள் என்றும் கூறுவர். இவன் இரண்டாம் இராசாதிராசன் ஆகலாம் என்பது மு. அருணாசலம் கருத்து. இரண்டாவது மகன் குமாரமகீதரன். இவனைக் குமார குலோத்துங்கன் என்பர். வரலாற்றுப் பார்வையில் இவன் குலோத்துங்கன்-3. மூன்றாவது மகன் இந்த உலாநூலின் பாட்டுடைத் தலைவன். [1]
இந்த உலாவைப் பாடிய ஆசிரியர் சங்கரசோழனின் தோழர். [2]
இந்த உலா மற்ற உலா நூல்களைப் போலவே பாட்டுடைத் தலைவனின் பாரம்பரியத்தை முதலில் சொல்லி, அவன் உலாவருதலைக் குறிப்பிடுகிறது. உலாவின்போது பேதை முதலான ஏழு பருவப் பெண்கள் கண்டு காமுறுதலைத் சொல்லுகிறது. மடந்தை பருவம் பற்றிக் கூறும்போது தலைவனின் தசாங்கம் கூறப்படுகிறது. இந்தப் பருவத்துப் பெண்கள் அம்மானை ஆடுகின்றனர்.
காண்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு ஆண்டு 2005