சங்கரம்பாடி சுந்தராச்சாரி

சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்பவர் தெலுங்கு மொழிக் கவிஞர் ஆவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு இலக்கியத்தில் அதீத ஈடுபாடு கொண்டு இவர் இயற்றிய மா தெலுகு தல்லிக்கி என்ற பாடலை ஆந்திரப் பிரதேச அரசு தன் அரசின் கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் திருச்சானூரில் பிறந்து பின்னர், திருப்பதியில் வாழ்ந்தார். தன் வாழ்க்கையை ஆசிரியர் பணியுடன் தொடங்கினார். 1942 ஆம் ஆண்டு, பள்ளியில் பணியாற்றிய போது தெலுங்கு கீதப் பாடலை எழுதினார். இப்பாடல் பின்னர், பாடகர்களால் பாடப்பட்டு, சித்தூர் வி. நாகையா நடித்த தீனபந்து என்ற தெலுங்குத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில், மொழிவாழி மாநிலம் பிரிக்க ஏற்பட்ட கோரிக்கையின்போதும் இப்பாடல் பயன்பட்டது. இப்பாடல் அடைந்த புகழினால், இதனை ஆந்திரப் பிரதேச அரசு தன் மாநில கீதமாக ஏற்றுக் கொண்டுள்ளது. இவரின் நினைவாக வெண்கலச் சிலையொன்று திருப்பதி நகரில் நிறுவப்பட்டுள்ளது.[1] இவர் சில தெலுங்கு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தீனபந்து என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆக்கங்கள்

தொகு
  • மா தெலுகு தல்லிக்கி
  • சுந்தர ராமாயணம்
  • சுந்தர பாரதம்

சான்றுகள்

தொகு