சங்கர் சிங்

இந்திய அரசியல்வாதி

சங்கர் சிங் (Shankar Singh) இந்தியாவின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] வடக்கு பீகார் விடுதலை இராணுவத்தின் தளபதியான இவர், பீகார் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். லோக் ஜனசக்தி கட்சியின் வேட்பாளராகவும் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.[2]

சங்கர் சிங்
Shankar Singh
பீகாரின் சட்டமன்றம்
பதவியில்
பிப்ரவரி 2005 – நவம்பர் 2005
முன்னையவர்பீமா பாரதி
பின்னவர்பீமா பாரதி
தொகுதிஉருபாலி
தனிப்பட்ட விவரங்கள்
பிற அரசியல்
தொடர்புகள்
லோக் ஜனசக்தி கட்சி
துணைவர்பிரதிமா குமாரி
வேலைவடக்கு பீகார் விடுதலை இராணுவத்தின் தளபதி

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பூர்ணியா மாவட்டத்தில் இருந்த இந்துசுதானி அவாம் மோர்ச்சா கட்சியின் மாவட்டத் தலைவியான பிரதிமா குமாரியை சங்கர் சர்மா திருமணம் செய்து கொண்டார்.[3]

தொழில்

தொகு

2000 ஆம் ஆண்டில் பூட்டன் சிங் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வடக்கு விடுதலை இராணுவம் கட்சியின் தலைமை சங்கர் சிங்கால் கைப்பற்றப்பட்டது.[4] வடக்கு விடுதலை இராணுவம் என்பது பூர்ணியாவில் பப்பு யாதவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்த்து பூட்டன் சிங்கால் உருவாக்கப்பட்ட ஒரு ராசபுதன போராளிகள் குழுவாகும். சங்கர் சிங்கின் கீழ், போராளிகள் வாக்காளர்களை அச்சுறுத்தி செல்வாக்கு செலுத்துவதன் மூலமும், பிராந்தியத்தில் சாவடிகளை கைப்பற்றுவதன் மூலமும் அரசியல் செல்வாக்கு பெற்றனர். உயர் சாதி வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவைத் தேடத் தொடங்கினர். பாரதிய சனதா கட்சியில் உள்வாங்கப்பட்ட உதய் பப்பு சிங்கையும் போராளிகள் வளர்த்து ஆதரித்தனர்.[5] 2004-2014 ஆண்டுகள் வரை இரண்டு முறை பூர்ணியா தொகுதியில் இருந்து இவர் நாடாளுமன்ற உறுப்பினரானார்.[6][7] சங்கர் சிங்கிற்கு லோக் சனசக்தி கட்சியின் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பிப்ரவரி 2005 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூபாலி தொகுதியில் இருந்து அதன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Raj, Dev (5 November 2015). "In two battles, it's dons vs dons via the missus". Telegraph India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-27.
  2. Mishra, Dipak (9 February 2005). "Dons in doomsland make poll a boom-boom affair | Patna News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). Archived from the original on 2020-04-27.
  3. "पूर्व विधायक शंकर सिंह को फंसाने की कोशिश : प्रतिमा कुमारी". Live Hindustan (in hindi). 8 August 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Prasad, Bhuvaneshwar (27 April 2000). "Butan killing: police still clueless". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.
  5. Anwar, Tarique (12 October 2015). "The gangs of Purnea: The journey of gangsters from intimidation to elections". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 2020-04-29.
  6. "General Election, 2004 (Vol I, II, III)". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  7. "Constituency wise Detailed Results - 2009". இந்தியத் தேர்தல் ஆணையம்.
  8. "Bihar 2005". இந்தியத் தேர்தல் ஆணையம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_சிங்&oldid=3743682" இலிருந்து மீள்விக்கப்பட்டது