சங்கர் சென்

சங்கர் சென் (Sankar Sen) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். மின் பொறியாளராகவும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய பொதுவுடமைக் கட்சி அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார். இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க அரசின் மின்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

சங்கர் சென்
Sankar Sen
மேற்கு வங்காள மின்துறை அமைச்சர்
பதவியில்
1991–1999
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1991–2001
முன்னையவர்சாந்தி ரஞ்சன் காடக்கு
பின்னவர்அருணாவா கோசு
தொகுதிடம் டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 திசம்பர் 1928
இறப்பு8 பிப்ரவரி 2020 (வயது 92)
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

வாழ்க்கை வரலாறு.

தொகு

இயாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த இவர்,வங்காள பொறியியல் கல்லூரியில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும் இருந்தார்.

1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் டம் டம் தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 1996 ஆம் ஆண்டில் மீண்டும் டம் டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க அரசாங்கத்தின் மின்சார அமைச்சராகவும் பணியாற்றினார்.

சென் தனது 92 ஆவது வயதில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 அன்று காலமானார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Elections, India, 1991, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  2. "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  3. "শঙ্কর সেনের জীবনাবসান" (in bn). 9 February 2020. https://www.anandabazar.com/state/former-bengal-minister-shankar-sen-passed-away-1.1106661. பார்த்த நாள்: 9 February 2020. "শঙ্কর সেনের জীবনাবসান". Anandabazar Patrika (in Bengali). 9 February 2020. Retrieved 9 February 2020.
  4. "প্রয়াত শঙ্কর সেন" (in bn). 9 February 2020. https://eisamay.indiatimes.com/nation/the-late-shankar-sen/articleshow/74035566.cms. பார்த்த நாள்: 9 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_சென்&oldid=4137777" இலிருந்து மீள்விக்கப்பட்டது