டம் டம்
டம் டம் (Dum Dum), இந்தியாவின் மேற்கு வ்ங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள நகராட்சி ஆகும். இது கொல்கத்தா மாநகர வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவில் உள்ளது. இது கொல்கத்தாவிற்கு வடகிழக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. கொல்கத்தா மெட்ரோ டம் டம் நகரத்துடன் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 12 டம் டம் வழியாகச் செல்கிறது. இங்கு டம் டம் மத்திய சிறைச்சாலை உள்ளது. டம் டம் பாசறை தொடருந்து நிலையம் இந்நகரத்தில் அமைந்துள்ளது.[4]
டம்டம் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 22°37′N 88°25′E / 22.62°N 88.42°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | வடக்கு 24 பர்கனா மாவட்டம் |
மண்டலம் | பெருநகர கொல்கத்தா மாநகராட்சி |
கொல்கத்தா மெட்ரோ | டம் டம் மெட்ரோ இரயில் நிலையம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | டம் டம் நகராட்சி[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.73 km2 (3.76 sq mi) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,14,786 |
• அடர்த்தி | 12,000/km2 (31,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | வங்காள மொழி[2][3] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 700028, 700079, 700080, 700081 |
தொலைபேசி குறியீடு எண் | +91 33 |
வாகனப் பதிவு | WB |
மக்களவைத் தொகுதி | டம் டம் |
சட்டமன்றத் தொகுதி | டம் டம் |
இணையதளம் | dumdummunicipality |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 9.23 எக்டேர் பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 1,14,786 ஆகும். அதில் ஆண்கள் 58,566 (51%) மற்றும் பெண்கள் 56,220 (49%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 960 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8,259 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 91.99% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8269 மற்றும் 508 ஆகவுள்ளனர்.[5]
பொருளாதாரம்
தொகுடம் டம் நகரத்தில் இயந்திரா இந்தியாவின் இராணுவ ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Dum Dum Municipality". dumdummunicipality.co.in. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "52nd Report of the Commissioner For Linguistic Minorities in India" (PDF). Nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
- ↑ "Fact and Figures". Wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 29 August 2019.
- ↑ "33811 Seldah Bangaon Local". Time Table. indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 26 May 2018.
- ↑ Dum Dum City Population Census 2011
- ↑ "Ordnance Factory Dum Dum". Indian Ordnance Factories. Archived from the original on 21 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 20 July 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Northern fringes
- Kolkata Airport (CCU)