சங்கீதா ஜிண்டால்

சங்கீதா ஜிண்டால் (Sangita Jindal) இந்தியத் தொழிலதிபரும், ஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளையின் தலைவருமாவார்.[1] இந்த அறக்கட்டளை ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்திற்குள் சமூக மேம்பாட்டு திட்டங்களை இயக்குகிறது. இவர் ஜிண்டால் கலை மையத்தையும் வழிநடத்துகிறார். மேலும் இவர் கலை நடைமுறைகள் மற்றும் விமர்சனக் கோட்பாட்டை மையமாகக் கொண்ட ஒரு முன்னணி கலை இதழான ஆர்ட் இந்தியா என்ற பத்திரிகையின் தலைவராக உள்ளார்.[2] இது இந்தியாவில் இடைநிலை கலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. 2009 மற்றும் 2019 இல் ஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளை பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கான தங்க மயில் விருதையும் வென்றுள்ளது  .[3]

சங்கீதா ஜிண்டால்
சங்கீதா ஜிண்டால்
பிறப்பு1962
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளையின் தலைவர்
வாழ்க்கைத்
துணை
சஜ்ஜன் ஜிண்டால்
பிள்ளைகள்பார்த் ஜிண்டால் உட்பட மூவர்

சுயசரிதை

தொகு

சங்கீதா ஜிண்டால் கொல்கத்தாவில் 1962 ஆகத்து 30 அன்று கைலாஷ் குமார் கனோரியா மற்றும் ஊர்மிளா கனோரியா ஆகியோருக்கு பிறந்தார்.[4] இவருக்கு சகேத் கனோரியா என்ற சகோதரி இருக்கிறார்.[5] அகமதாபாது புனித சேவியர் கல்லூரியில் கல்வியை முடித்தார்.[6]

தொழில்

தொகு

ஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளையில், மக்களை மேம்படுத்துவதன் மூலமும், நிலையான அளவிடக்கூடிய தீர்வுகளை ஆதரிப்பதன் மூலமும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இவர் முயற்சிக்கிறார். தொழிற்பயிற்சி மற்றும் கூட்டாண்மை மற்றும் நிறுவனங்களுடனான கூட்டணி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான வளர்ச்சி, மற்றும் கிராமப்புற பிபிஓ மூலம் பெண்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட அறப்பணிகளிலும் இவர் ஈடுபடுகிறார்.  [7] "பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் பிரச்சாரத்தின் கீழ் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிஷன் ஹசார் பிரச்சாரம் எனப்படும் குழந்தை மற்றும் தாய்வழி சுகாதாரத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.[8] 2000 முதல் 2003 வரை கலா கோடா விழாவின் தலைவராகவும் இருந்தார்.[9]

விருதுகள்

தொகு

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அறைகளின் கூட்டமைப்பு ' மகளிர் பரோபகாரர்' என்ற விருது வழங்கியது.[10]

பணிகள்

தொகு

ஜே.எஸ்.டபிள்யூ அறக்கட்டளை மூலம் சர் ஜே.ஜே. கலைப் பள்ளியின் உட்புறங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பிற்கு இவர் பங்களித்துள்ளார்.[11] இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அவை மகளிர் அதிகாரமளித்தல் கோட்பாடுகள் முன்முயற்சியின் தலைவராகவும் இருந்தார்.[12] சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் பூமி பராமரிப்பு விருதுகளை நிறுவனமயமாக்குவதற்கும் இவர் பணியாற்றி வருகிறார்.[13] அம்பியில் உள்ள மூன்று கோவில்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும்பொருட்டு அம்பி அறக்கட்டளையை இவர் உருவாக்கியுள்ளார்.[14][15] இலாபநோக்கமற்ற அறக்கட்டளையான "ஐசனோவர்" சக ஊழியராகவும், டெட் எக்ஸ் கேட்வேவின் ஆலோசகரும் ஆவார்.[16]

குடும்பம்

தொகு

இவர், ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள சஜ்ஜன் ஜிண்டாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பார்த் ஜிண்டால் என்ற மகனும், தாரினி ஜிண்டால் ஹண்டா மற்றும் தன்வி ஜிண்டால் ஷேட் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.[17]

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 11 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "The Fabulous Five".
  3. "ROLL OF HONOUR". goldenpeacockaward.com. Archived from the original on 4 மார்ச் 2021. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Menon, Rashmi (14 January 2015). "Mum's the word for JSW Steel's first lady Sangita Jindal". The Economic Times. http://economictimes.indiatimes.com/magazines/panache/mums-the-word-for-jsw-steels-first-lady-sangita-jindal/articleshow/45884163.cms. பார்த்த நாள்: 8 November 2019. 
  5. "The big, fat, Indian wedding: Sangita Jindal's nephew Akshay Kanoria ties the knot with Shreya Seksaria". The Economic Times. 8 March 2018. https://economictimes.indiatimes.com/magazines/panache/the-big-fat-indian-wedding-sangita-jindals-nephew-akshay-kanoria-ties-the-knot-with-shreya-seksaria/articleshow/63197076.cms?from=mdr. பார்த்த நாள்: 5 January 2021. 
  6. Subramanyam, Chitra (6 August 2009). "The memory keeper". India Today. https://www.indiatoday.in/magazine/supplement/story/20090817-the-memory-keeper-740454-2009-08-06. பார்த்த நாள்: 5 January 2021. 
  7. "Latest News: India News | Latest Business News | BSE | IPO News". Moneycontrol.
  8. "Like mother, like daughter: The breakthrough Mission Hazaar campaign". The Economic Times. 15 October 2015. http://economictimes.indiatimes.com/magazines/panache/like-mother-like-daughter-the-breakthrough-mission-hazaar-campaign/articleshow/49378733.cms. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-03. பார்க்கப்பட்ட நாள் 2021-03-02.
  11. "Kipling house to become museum | Mumbai News - Times of India".
  12. "Indian companies come together for the first time to champion gender equality".
  13. "Earth care awards 2012: Celebrating the green champs - Times of India". The Times of India.
  14. "JSW Foundation chairperson Sangita Jindal is a patron of arts". The Economic Times. 27 November 2014. http://economictimes.indiatimes.com/magazines/panache/jsw-foundation-chairperson-sangita-jindal-is-a-patron-of-arts/articleshow/45294429.cms. 
  15. "THE POLITICS OF CULTURE". Pune Mirror. 4 October 2014. https://punemirror.indiatimes.com/columns/columnists/suhel-seth/THE-POLITICS-OF-CULTURE/articleshow/49210405.cms. [தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Sangita Jindal".[தொடர்பிழந்த இணைப்பு]
  17. "A family affair at Tarini Jindal's 'Wasabi' birthday bash". The Economic Times. 14 November 2016. https://economictimes.indiatimes.com/magazines/panache/celebrations-galore-for-the-jindals-a-new-addition-to-the-family-and-a-birthday-bash/articleshow/55410222.cms?from=mdr. பார்த்த நாள்: 5 January 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_ஜிண்டால்&oldid=3929502" இலிருந்து மீள்விக்கப்பட்டது