சங்கீதா பாரூவா பிசாரதி

சங்கீதா பாரூவா பிசாரதி (Sangeeta Barooah Pisharoty) ஓர் இந்திய பத்திரிகையாளர் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார், [1] தற்போது இவர் நவீன செய்தி ஊடகமான தி வயரில் துணை ஆசிரியராக உள்ளார்.[2] முன்பாக இவர் தேசிய ஆங்கில இதழான தி இந்துவில்ஏழு சகோதரி மாநிலங்களுக்கான நிருபராக இருந்தார். [3] அசாம் இயக்கம், அசாம் உடன்படிக்கை மற்றும் அசாமில் நடந்த கிளர்ச்சிகள் பற்றிய அசாம்: தி அக்கார்டு, தி டிஸ்கார்ட் எனும் தனது முதல் நூலுக்காகப் பரவலாக அறியப்படுகிரார். [4] [5]

சங்கீதா பாரூவா பிசாரதி
தொழில் எழுத்தாளர்,பத்திரிகையாளர்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
ராம்நாத் கோயங்கா

அசாமின் மாஜூலி தீவில் மண் அரிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழப்பது குறித்த தொடர் செய்திகளுக்காக 2011 ஆம் ஆண்டு முதல் பரோவா அபிவிருத்தி ஆய்வுகள் மையத்திலிருந்து ஆய்வுதவித் தொகைப் பெற்று வருகிறார். [சான்று தேவை] டெல்லி நகரத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வீட்டுவசதி பிரிப்பது குறித்த இவரது அறிக்கைக்காக 2017 ஆம் ஆண்டில், பத்திரிக்கைத் துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக ராம்நாத் கோயங்கா விருது பெற்றார். [6] [7]

இவர் குவகாத்தி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு இவர் 1995 இல் பட்டம் பெற்றார். பரோவா தனது தொழில் வாழ்க்கையை தேசிய செய்தி நிறுவனமான யுனைடெட் நியூஸ் ஆஃப் இந்தியாவில் இருந்து தொடங்கினார்.இதன்மூலம் வடகிழக்கு இந்தியாவில் இருந்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முதல் பெண்மணி எனும் பெருமை பெற்றார். [8]

சான்றுகள்தொகு