சங்கீதா யாதவ்
சங்கீதா யாதவ் (Sangeeta Yadavv) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினருமாவார். இவர் உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்திலுள்ள சௌரி-சௌரா (சட்டமன்றத் தொகுதி)யில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]
சங்கீதா யாதவ் | |
---|---|
சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) 17ஆவது சட்டப் பேரவை உத்தரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மார்ச் 2017 | |
முன்னையவர் | ஜெய் பிரகாசு நிசாத் |
தொகுதி | சௌரி-சௌரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூலை 1981 போரிவலி, மும்பை, மகாராட்டிரம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | அஜய் குமார் (தி. 2009) |
பிள்ளைகள் | 1 |
வாழிடம்(s) | கோரக்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
கல்வி | இளங்கலைச் சட்டம் |
முன்னாள் கல்லூரி | எம் எம் எச் கல்லூரி, காசியாபாத் சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகம் |
வேலை | சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) |
தொழில் | வணிகம் |
ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்
தொகுசங்கீதா, 1981 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மகாராட்டிராவின் மும்பையிலுள்ள போரிவலியில் ஆர்.பி. யாதவ் என்பவருக்கு பிறந்தார். 2009 இல், இவருக்கு அஜய் குமார் (வருமான வரி இணை ஆணையர்) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. [2] சங்கீதா பிற்படுத்தப்பட்ட வகுப்பு ( யாதவர் ) சமூகத்தைச் சேர்ந்தவர். 2004 இல் காசியாபாத் எம் எம் எச் கல்லூரியில் இளங்கலை சட்டப் பட்டம் பெற்றார் [3]
அரசியல் வாழ்க்கை
தொகுசங்கீதா யாதவ் , உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டப் பேரவைத் தேர்தலில் (2017) தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் சௌரி-சௌரா (சட்டமன்றத் தொகுதி) விலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் மனோரஞ்சன் யாதவை 45,660 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]
சான்றுகள்
தொகு- ↑ "Candidate affidavit". my neta.info. http://www.myneta.info/uttarpradesh2017/candidate.php?candidate_id=4773. பார்த்த நாள்: 3 December 2018.
- ↑ "सदस्य उत्तर प्रदेश विधान सभा". uplegisassembly.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-08.
- ↑ "Member Profile". official website of Legislative Assembly of Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.
- ↑ "Chauri-Chaura Election Results 2017". elections.in. பார்க்கப்பட்ட நாள் 3 December 2018.