சங்கீதா ரெட்டி
சங்கீதா ரெட்டி (Sangita Reddy) இந்தியாவைச் சேர்ந்த வணிக நிர்வாகியும் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநரும் ஆவார்.
சங்கீதா ரெட்டி | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பட்டம் | இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | அப்போலோ மருத்துவமனை |
வாழ்க்கைத் துணை | கே. விஸ்வேஸ்வர ரெட்டி |
பிள்ளைகள் | அனிந்தித் ரெட்டி உட்பட மூன்று மகன்கள் |
உறவினர்கள் |
|
தொழில்
தொகுசங்கீதா ரெட்டி அப்போலோ மருத்துவமனையின்[1] இணை நிர்வாக இயக்குநராகவும், இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார். [2] பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான (2012-2017) சுகாதாரத்திற்கான வழிகாட்டுதல் குழுவின் உறுப்பினராக, இந்திய அரசின் திட்டக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2010 முதல் 2016 வரை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் மாநில அமைப்பின் பல துறைசார் மற்றும் தொழில்துறை முயற்சிகளுக்கு இவர் வெற்றிகரமாக தலைமை தாங்கினார். இதற்கு முன்பு புதுதில்லியின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் சுகாதார பராமரிப்பின்[4] தலைவராகவும், ராக்பெல்லர் பணிக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். அங்கு இவர் தனியார் சுகாதார மேம்பாட்டுக்கு பொறுப்பாக இருந்தார்.[5] மேலும் இவர் பல அமைப்புகளின் குழு உறுப்பினராகவும் உள்ளார்.[6]
விருதுகள்
தொகுகுடும்பம்
தொகுஅப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான பிரதாப் சி. ரெட்டியின் மகள் ஆவார்.[9] இவர் கே. விஸ்வேஸ்வர ரெட்டி என்பவரை மணந்தார். இவர்களுக்கு அனிந்தித் ரெட்டி உட்பட மூன்று மகன்கள் உள்ளனர்.[10][11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sangita Reddy".
- ↑ "Sangita Reddy is FICCI President".
- ↑ "Sangita Reddy".
- ↑ "New FICCI chairpersons inducted for Telangana, AP".
- ↑ "Speakers | e-Governance Portal".
- ↑ "Sangita Reddy Joint Managing Director, Apollo Hospitals Enterprises".
- ↑ "IMA Mediko Award 2019 | Medical Dialogues". medicaldialogues.in. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
- ↑ "Apollo Joint MD Dr Sangita Reddy Conferred with Best Female Healthcare leader award,Medical Dialogues,May 06, 2019". ficci.in. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
- ↑ "How Dr Prathap Reddy avoids ambiguity on succession and structure at Apollo Hospitals". Forbes India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
- ↑ "Telangana's richest politician Konda Vishweshwar declares family assets of Rs 895 cr". www.thenewsminute.com. 23 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2 July 2019.
- ↑ Choudhury, Sonya Dutta (20 October 2017). "Sangita Reddy: Donning many hats" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 October 2019.